KKR vs MI 1st Innings: 155 ரன் இலக்கு நிர்ணயித்த மும்பை... சேஸ் செய்யுமா கொல்கத்தா?
கொல்கத்தா அணிக்கு எதிராக 1000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார் ரோஹித். அதுமட்டுமின்றி, ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
ஐ.பி.எல். தொடரின் இன்று நடைபெறும் 34வது ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்று மோதியது. அபுதாபியில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. இந்த போட்டியில், கொல்கத்தாவுக்கு 155 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த போட்டியில் ரோஹித் களமிறங்கியதால், மும்பை ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். டி காக்கோடு ஓப்பனிங் களமிறங்கிய ரோஹித், சிறப்பாக விளையாடினார். இந்த போட்டியில் ரன் சேர்த்தது மூலம், கொல்கத்தா அணிக்கு எதிராக 1000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். அதுமட்டுமின்றி, ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
Rohit Sharma crosses 1000 runs against KKR 😯👏
— Mumbai Indians (@mipaltan) September 23, 2021
First-ever batter to reach this milestone against any team in IPL 😎#OneFamily #MumbaiIndians #IPL2021 #MIvKKR
சிறப்பாக விளையாடி வந்த ரோஹித், சுனில் நரேன் பந்துவீச்சில் 33 ரன்கள் எடுத்திருந்தபோது கேட்ச் கொடுத்து அவுட்டானார். ரோஹித்தை அடுத்து சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு மும்பை அணி 80 ரன்களை எட்டியது. தொடர்ந்து நிதானமாக விளையாடிய டி-காக் அரை சதம் கடந்தார். அதிரடியாக விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட சூர்யகுமார், 5 ரன்களில் வெளியேறினார். அவரை அடுத்து இஷான் கிஷன் களமிறங்கினார். ஆனால், சொதப்பிய அவர் 14 ரன்களுக்கு வெளியேறினார், அவரை அடுத்து 55 ரன்கள் எடுத்திருந்தபோது டி-காக் அவுட்டாகினார். கடைசி ஓவர்களில் பொல்லார்டும், க்ருணாலும் களத்தில் நின்று பேட்டிங் செய்தனர்.
Qlassy player. QadaK fifty. 🙌💙#OneFamily #MumbaiIndians #IPL2021 #MIvKKR @QuinnyDeKock69 pic.twitter.com/MHgJrSA8QW
— Mumbai Indians (@mipaltan) September 23, 2021
2 பவுண்டரிகள், 1 சிக்சர் என வந்த வேகத்தில் ரன் சேர்த்துவிட்டு ரன் - அவுட்டாகி வெளியேறினார் பொல்லார்டு. அவரைத் தொடர்ந்து க்ருணாலும் பெவிலியன் திரும்பினார்.கொல்கத்தா பவுலர்களைப் பொருத்தவரை, தமிழக வீரர் வருண் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளும், ஃபெர்குசன் 2 விக்கெட்டுகளும், நரேன் 1 விக்கெட்டும் எடுத்தனர். இதனால், 20 ஓவர் முடிவில், மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது மும்பை.
ஐபிஎல் தொடரில் இதுவரை:
இரு அணிகளும் இதற்கு முன்பு ஐ.பி.எல். தொடர்களில் 28 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் மும்பை அணி 22 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணி 6 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. போட்டி இன்று நடைபெற உள்ள அபுதாபி ஷேக் சையத் மைதானத்தில் இரு அணிகளும் இதற்கு முன்பு 3 முறை மோதியுள்ளனர். அதில், 2 முறை மும்பை அணியும், 1 முறை கொல்கத்தா அணியும் வெற்றி பெற்றுள்ளது. இந்த சீசனில் ஏற்கனவே, இரு அணிகளும் மோதிக்கொண்ட போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.