MI vs RR Live Updates: ராஜஸ்தானை ஊதித்தள்ளியது மும்பை
IPL 2021, Match 51, MI vs RR: ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நேருக்கு நேர் மோதுகின்றன

Background
ஐ.பி.எல். தொடரில் இன்று ஷார்ஜாவில் ஐ.பி.எல். தொடரில் நடைபெறும் போட்டியில் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் முக்கியமான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றனர். இந்த போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ராஜஸ்தானை ஊதித்தள்ளியது மும்பை
ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 90 ரன்கள் என்ற இலக்கை மும்பை அணி 8.2 ஓவர்களில் எட்டிப்பிடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிரடியாக ஆடும் மும்பை - 2 விக்கெட்டுகள் இழந்துள்ளது
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்களை எடுத்துள்ளது. ரோகித் சர்மா 22 ரன்களை அதிரடியாக எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவும் 13 ரன்னில் ஆட்டமிழந்தார்.




















