GT vs RCB: அதிரடி காட்டிய ஹர்திக் பாண்டியா.. ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்க ஆர்சிபிக்கு 169 ரன்கள் இலக்கு!
ஆர்சிபி அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அத்துடன் இன்று வெற்றி பெற்றாலும் ஆர்சிபி அணி தற்போது உள்ள ரன் ரேட்டை அதிகரிக்க வேண்டும்.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. நடப்புத் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஏற்கெனவே ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் அணி தற்போது வரை 13 போட்டிகளில் விளையாடி 14 புள்ளிகளுடன் உள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்வதை தேர்வு செய்தது. அதனை அடுத்து களமிறங்கிய அந்த அணியின் ஓப்பனர்கள் கில், சாஹா பெரிதாக சோபிக்கவில்லை. ஒன் டவுன் களமிறங்கிய வாடேவும் அவுட்டாக, கேப்டன் ஹர்டிக் பாண்டியா களத்தில் நம்பிக்கை அளித்தார்.
அரை சதம் கடந்து விளையாடிய அவர், 4 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என 47 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் ஜோடி சேர்ந்த மில்லரும் சிறப்பாக அடிக்க, அணியின் ஸ்கோர் உயர்ந்தது. இதனால், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு குஜராத் அணி 168 ரன்கள் சேர்த்திருக்கிறது.
Innings Break!@gujarat_titans post a total of 168/5 on the board.#RCB chase coming up shortly.
— IndianPremierLeague (@IPL) May 19, 2022
Scorecard - https://t.co/TzcNzbrVwI #RCBvGT #TATAIPL pic.twitter.com/g7k6jYEA7f
மேலும், ஆர்சிபி அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அத்துடன் இன்று வெற்றி பெற்றாலும் ஆர்சிபி அணி தற்போது உள்ள ரன் ரேட்டை அதிகரிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் டெல்லி அணி தன்னுடைய கடைசி போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் நிச்சயம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும்.
குஜராத் டைட்டன்ஸ் அணியை பொறுத்தவரை இந்தப் போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் 22 புள்ளிகளுடன் முதலிடத்தை உறுதி செய்துவிடும். தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணி 20 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் குஜராத் டைட்டன்ஸ் அணி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்