DC vs RR Live Score: 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது ராஜஸ்தான்... வெற்றியோடு முதலிடம் சென்றது டெல்லி!
IPL 2021 DC vs RR Live Score : ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் 36வது ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியினரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினரும் இன்று நேருக்கு நேர் மோதுகின்றனர்.
LIVE
Background
அபுதாபியில் நடைபெறும் போட்டியில் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள டெல்லி கேபிடல்ஸ் அணியும், புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினரும் மோதுகின்றனர்.
ராஜஸ்தானை வீழ்த்தி டெல்லி அணிக்கு அடுத்த வெற்றி...!
டெல்லி அணி நிர்ணயித்த 155 ரன்களை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்களை மட்டுமே 20 ஓவர்கள் முடிவில் எடுத்தது. இதனால், டெல்லி அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் முன்னேறியது.
12 பந்துகளில் 54 ரன்கள்...! தோல்வியின் பிடியில் ராஜஸ்தான்..!
டெல்லி அணி நிர்ணயித்த 155 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நிலையில், தற்போது 12 பந்துகளில் 54 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலையில் ராஜஸ்தான் உள்ளது. அந்த அணியின் கேப்டன் சாம்சன் 53 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
சாம்சனின் பார்ட்னரை காலி செய்த நோர்ட்ஜே..!
155 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தனி ஆளாக போராடி வந்த ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு துணையாக ஆடிய ராகுல்திவேதியா வேகப்பந்துவீச்சாளர் நோர்ட்ஜே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் அரைசதத்தை கடந்தார்....! விறுவிறுப்பான கட்டத்தில் ஆட்டம்...!
ராஜஸ்தான் அணியின் வெற்றிக்காக தனி ஆளாக போராடி வரும் அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், தனி ஆளாக போராடி அரைசதத்தை கடந்தார். அவர் 39 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 50 ரன்களை எடுத்தார். ராஜஸ்தான் அணி தற்போது 5 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்களை எடுத்துள்ளது. ராஜஸ்தான் வெற்றிக்கு 22 பந்தில் 60 ரன்கள் தேவைப்படுகிறது.
அதிரடி ஆட்டத்தை தொடங்கி சாம்சன்...!
ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 36 பந்தில் 87 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டதால், சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி வருகிறார். அவர் 34 பந்தில் 6 பவுண்டரியுடன் 41 ரன்கள் எடுத்துள்ளார். தற்போது ராஜஸ்தான் வெற்றிக்கு 30 பந்தில் 73 ரன்கள் தேவைப்படுகிறது.