CSK vs DC LIVE: 15 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி வெற்றி.. சென்னை கோட்டை மீண்டும் தகர்ந்தது
CSK vs DC IPL 2025 LIVE Score:சென்னை சேப்பாக்கத்தில் நடைப்பெற்ற போட்டியில் டெல்லி அணி அபார வெற்றி

Background
இன்று நடைபெறும் லீக் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி எதிர்கொள்ளவுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
CSK vs DC:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது மும்பை அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் வெற்றி பெற்றாலும், கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. அதேநேரம், டெல்லி அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வென்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. இதன் மூலம் இன்றைய போட்டியில் வென்று ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க சென்னை அணியும், இன்றைய போட்டியில் வென்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய டெல்லி அணியும் தீவிரம் காட்டி வருகிறது.
சென்னை அணி பந்துவீச்சில் வலுவானதாகவே உள்ளது. குறிப்பாக நூர் அகமது, அஸ்வின் மற்றும் கலீல் அகமது ஆகியோர் அணிக்கு வலுசேர்க்கின்றனர். ஆனால், பேட்டிங் தான் சென்னை அணியின் பெரும் பலவீனமாக உள்ளது. டாப் ஆர்டர் தொடர்ந்து சொதப்புவது, துபே எதிர்பார்த்தபடி ரன் குவிக்க முடியாமல் தடுமாறுவது, ருதுராஜிற்கு கூடுதல் சுமையாக அமைந்துள்ளது. அதேநேரம், மற்ற அணிகளை போல் பெரிய ஹிட்டர்கள் யாரும் இல்லாததும் சென்னை அணிக்கு பாதகமாக தெரிகிறது.
அதேநேரம், டெல்லி அணி வலுவானபிளேயிங் லெவனை கொண்டுள்ளது.அசுதோஷ் சர்மா, டூப்ளெசிஸ், மெக்கர்க் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் பேட்டிங்கில் அசத்த, மிட்செல் ஸ்டார்க், விப்ராஜ் நிகம், குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் பந்துவீச்சில் மிரட்டுகின்றனர். இதனால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு சவால் நிறைந்ததாக இருக்கும்.
சேப்பாக்கம் மைதானம் எப்படி?
சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள ஆடுகளம் திடமானதாகவும், நன்கு தயாரிக்கப்பட்டதாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் இது பேட்டர்களுக்கு ஏற்றதாகத் தோன்றினாலும், ஆட்டம் முன்னேறும்போது அதன் உண்மையான தன்மை மாறும். கடந்த சீசனின் சராசரி ஸ்கோர் சுமார் 170 ஆக இருந்தது, ஆனால் இந்த முறை ஸ்கோர்கள் அதிகமாக இருக்கலாம்.
சுவாரஸ்யமாக, அதிக புல் இல்லாத நல்ல நீளமுள்ள பகுதிகள் சற்று பிடிப்பைக் கொண்டுள்ளன, இதனால் சுழற்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். சுமார் 160-170 ஸ்கோர் சமமாகக் கருதப்படுகிறது, அதே நேரத்தில் 185 க்கு அருகில் உள்ள எதுவும் போட்டியை வென்றெடுக்க உதவும்.
CSK vs DC LIVE: வெற்றி பெற்றது டெல்லி அணி
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
CSK vs DC LIVE: கடைசி 5 ஓவர்கள்... சேஸ் செய்யுமா சென்னை?
சென்னை அணிக்கு கடைசி 5 ஓவர்களில் 78 ரன்கள் தேவை




















