(Source: ECI/ABP News/ABP Majha)
IPL 2024: ஐபிஎல் 2024 டைட்டில் ஸ்பான்சர்ஷிப்... சீன நிறுவனங்களுக்கு ஆப்படிக்கும் பிசிசிஐ?
ஐபிஎல் 2024 டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பிற்கு சீன பிராண்டுகளை பிசிசிஐ அனுமதிக்க வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு (ஐபிஎல்) டைட்டில் ஸ்பான்சரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில், ஏலத்தில் ஈடுபடுபவர்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. பிசிசிஐ சீன நிறுவனங்கள் அல்லது பிராண்டுகளுடன் தொடர்புகொள்வதில் தயக்கம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
ஐபிஎல் 2024:
இந்தியாவில் 17 ஆவது ஐபிஎல் 2024 தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கான மினி ஏலம் கடந்த 19 ஆம் தேதி துபாயில் நடந்தது. . இந்த ஏலத்திற்கு முன்னதாக ஐபிஎல் அணிகளில் தக்க வைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும் டிரேட் முறையில் அணிகளின் வீரர்களும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் தொடர் நடைபெறும் போது அது ரசிகர்களால் கொண்டாடப்படும். அதேபோல், இந்திய அணியை சேர்ந்த வீரர்கள் பல்வேறு அணிகளில் விளையாடுவதால் ரசிகர்கள் அவர்களை தனிப்பட்ட முறையில் ரசிப்பார்கள். அதோடு தங்களுக்கு பிடித்த வீரர்கள் எந்த அணியில் விளையாடுகின்றார்களோ அந்த அணிக்கு தங்களது ஆதரவையும் தெரிவிப்பார்கள்.
இதனால் தான் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வந்தது. இதன் தாக்கம் ஐபிஎல் போட்டிகளை போலவே பல்வேறு நாடுகளும் தங்கள் நாட்டில் லீக் போட்டிகளை நடத்தி வருகிறது. ஆனால், இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு நிகராக அவை பிரபலம் அடைய வில்லை என்பது தான் உண்மை. இச்சூழலில், தான் ஐபிஎல் 2024 ஆம் ஆண்டிற்கான ஸ்பான்சர்ஷிப்பிற்கு பிசிசிஐ சீன நிறுவனங்கள் அல்லது பிராண்டுகளுடன் தொடர்புகொள்வதில் தயக்கம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்தியா-சீனா மோதல்:
இந்தியா மற்றும் சீனா எல்லையில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, சீனா நிறுவனமான விவோ (Vivo) தனது ஐந்தாண்டு ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி, டாடா குழுமத்திடம் ஸ்பான்சர்ஷிப்பை ஒப்படைத்தது.
ITT வெளியிட்டுள்ள டெண்டருக்கான அழைப்பில், கார்ப்பரேட் நிறுவனமான ஒவ்வொரு ஏலதாரரும் இந்தியாவுடன் நட்புறவு இல்லை என்றால் ஸ்பான்சர்ஷிப்பில் இணைக்கப்பட கூடாது என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக, ஸ்பான்சர்ஷிப் டெண்டருக்கான ஏலம் வரும் ஜனவரி மாதம் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏலதாரர்களின் தகுதியின்மை:
ஏலதாரர்கள், தங்கள் குழு நிறுவனங்களுடன் சேர்ந்து, கிரிப்டோ வர்த்தகம், கிரிப்டோ பரிமாற்றம், கிரிப்டோ டோக்கன்கள் அல்லது அதுபோன்ற முயற்சிகளில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
இந்தியாவிலோ அல்லது உலக அளவிலோ பந்தயம், சூதாட்ட சேவைகள் அல்லது அதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்கள் தகுதியின்மை அடிப்படையில் நிராகரிக்கப்படுவார்கள்.
மேலும் படிக்க: Best T20I XI of 2023: 2023 ஆம் ஆண்டின் சிறந்த T20I XI... இடம்பிடித்த இந்தியாவின் இளம் வீரர்கள் யார்?
மேலும் படிக்க: Ashwin: அடித்தது ஜாக்பாட்! 500 விக்கெட்டுகளை கைப்பற்றுவாரா அஸ்வின்? ரசிகர்கள் ஆர்வம்