மேலும் அறிய

ODI World Cup 2023: உலகக்கோப்பையின் முதல் அரைசதம்...! அதிரடி காட்டிய ஜோ ரூட்!

இந்த உலகக்கோப்பையின் முதல் லீக் ஆட்டத்தில் முதல் அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் பெற்றுள்ளார்.

ரசிகர்கள் காத்துக்கிடந்த ஐசிசி உலகக்கோப்பை தொடர் இன்று (அக்டோபர் 5) தொடங்கியுள்ளது. 

மொத்தம் 45 லீக் போட்டிகள் நடைபெற உள்ள சூழலில் முதல்  லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. அதன்படி இந்த போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில்,  டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில்  இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர்களான ஜானி பேர்ஸ்டோ மற்றும் டேவிட் மலான் ஆகியோர் களமிறங்கினர்.

அதில் டேவிட் மலான் நியூசிலாந்து பந்து வீச்சாளர் மேட் ஹென்றியின் பந்து வீச்சில் டாம் லாதமிடம் கேட்ச் கொடுத்து தன்னுடைய விக்கெட்டை இழந்தார். அதன்படி, அவர் 24 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் மொத்தம் 14 ரன்கள் எடுத்து நடையைக்கட்டினார்.

ஆனால், மறுபுறம் பொறுமையாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோ 35 பந்துகள் களத்தில் நின்றார். அவர், 4 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் என மொத்தம் 33 ரன்கள் எடுத்து நியூசிலாந்து பந்து வீச்சாளர் மிட்செல் சாண்ட்னெரிடம் தன்னுடைய விக்கெட்டை இழந்தார். 

முன்னதாக அந்த அணி 10 ஓவர்களில் 64 ரன்கள் எடுத்திருந்தது. இச்சூழலில் தான் மூன்றாவது விக்கெட்டுக்கு களம் கண்ட ஜோ ரூட் தன்னுடைய அதிரடியை தொடங்கினார்.

அரைசதம்.

ஒவ்வொரு உலகக்கோப்பையிலும் முதல் ரன், முதல் விக்கெட், முதல் சதம் மற்றும் முதல் அரைசதம் விளாசும் வீரர்கள் யார் என்பதை அறிய ரசிகர்கள் காத்திருப்பர்.

அதன்படி, இந்த உலகக்கோப்பையின் முதல் லீக் ஆட்டத்தில் முதல் அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் பெற்றுள்ளார்.

ஜோ ரூட்டின் அதிரடி

வலது கை பேட்ஸ்மேனான ஜோ ரூட் ஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சிறப்பாக ஆடி வந்த ஜோ ரூட் 86 பந்துகளில் தற்போது வரை மொத்தம் 77 ரன்கள் சேர்த்த நிலையில் பகுதி நேர பந்து வீச்சாளர் க்ளன் பந்து வீச்சில் தனது விக்கெட்டினை இழந்தார். இவர் 4 பவுண்டரிகள்  1 சிக்ஸர் அடங்கும்.

ஏமற்றம் அளித்த ஹாரி ப்ரூக்

இந்த லீக் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹாரி ப்ரூக் 16 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்ஸர் என மொத்தம் 25 ரன்கள் எடுத்து நடையைக்கட்டினார். 

அடுத்து வந்த மொய்ன் அலி 17 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, மறுபுறம் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் 43 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். 

தற்போது ஜோ ரூட் மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் ஜோடி விளையாடி வருகிறது. 34 ஓவர்கள் முடிவின் படி இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து மொத்தம் 192 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் படிக்க: ODI World Cup 2023: உலக கோப்பையை பார்க்க மைதானம் வர்றீங்களா? சர்ப்ரைஸ் தரும் பிசிசிஐ.. ஜெய் ஷாவின் அசத்தல் அறிவிப்பு

மேலும் படிக்க: Suryakumar Yadav: “உலகக்கோப்பையில் சூர்யகுமாரை சேர்க்க இதுதான் ஒன்றுதான் வழி” - முன்னாள் வீரர் பத்ரிநாத் கணிப்பு

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

IND vs NZ: இரண்டு ஆண்டுகளாக வெற்றிக்காக ஏங்கும் இந்தியா? கம்பீர் - கில் காம்போ கம்பேக் தருமா?
IND vs NZ: இரண்டு ஆண்டுகளாக வெற்றிக்காக ஏங்கும் இந்தியா? கம்பீர் - கில் காம்போ கம்பேக் தருமா?
Siraj: மீண்டும் மீண்டுமா? 2வது டெஸ்டிலும் ஓரங்கட்டப்பட்ட சிராஜ்! என்னதான் நடக்குது இந்திய அணியில்?
Siraj: மீண்டும் மீண்டுமா? 2வது டெஸ்டிலும் ஓரங்கட்டப்பட்ட சிராஜ்! என்னதான் நடக்குது இந்திய அணியில்?
Hardik Pandya: ராஜஸ்தான் அணியில் இணையவிருந்த ஹர்திக்.. மும்பையின் ஒரே கண்டிஷனால் முடிந்த டோல் - என்ன ஆச்சு?
ராஜஸ்தான் அணியில் இணையவிருந்த ஹர்திக்.. மும்பையின் ஒரே கண்டிஷனால் முடிந்த டோல் - என்ன ஆச்சு?
IND vs NZ: வெற்றியைத் தீர்மானிக்கும் வேகப்பந்துவீச்சு.. சிராஜ் உள்ளே? வெளியே? நாளை தொடங்கும் 2வது டெஸ்ட்!
IND vs NZ: வெற்றியைத் தீர்மானிக்கும் வேகப்பந்துவீச்சு.. சிராஜ் உள்ளே? வெளியே? நாளை தொடங்கும் 2வது டெஸ்ட்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kallakurichi MLA: ஆபாசக்குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ கைது - பறிபோகுமா எம்.எல்.ஏ பதவி?
Kallakurichi MLA: ஆபாசக்குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ கைது - பறிபோகுமா எம்.எல்.ஏ பதவி?
தவெக எம்.எல்.ஏ கைது விவகாரம் தொடர்பாக காவல்துறை எச்சரிக்கை: விவரம் தெரியுமா?
தவெக எம்.எல்.ஏ கைது விவகாரம் தொடர்பாக காவல்துறை எச்சரிக்கை: விவரம் தெரியுமா?
Thiruparankundram Case: திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: 100 ஆண்டுகால போராட்டம் முதல் உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு வரை - முழு பின்னணி
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: 100 ஆண்டுகால போராட்டம் முதல் உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு வரை - முழு பின்னணி
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் நாளை தீபம் ஏற்ற ஆணை - அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம்!
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் நாளை தீபம் ஏற்ற ஆணை - அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம்!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் - செய்யப்பட்ட மாற்றம் என்ன?
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் - செய்யப்பட்ட மாற்றம் என்ன?
சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் வெளியான தீர்ப்பு - முழு விவரம் தெரியுமா?
சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் வெளியான தீர்ப்பு - முழு விவரம் தெரியுமா?
"இறை உணர்வோடு விளையாடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்" - தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஷீஷ் மஹால் பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு! உள்ளே இத்தனை ஆடம்பரமா!
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஷீஷ் மஹால் பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு! உள்ளே இத்தனை ஆடம்பரமா!
Embed widget