FIFA WC 2022 Qatar: பெனால்டி ஷூட் அவுட் முறையில் 3-1 என்ற கணக்கில் வென்றது குரோஷியா.. சோகத்துடன் வெளியேறியது ஜப்பான்
22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தார் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலிறுதிக்கு தகுதி பெறும் 2ஆவது சுற்று ஆட்டத்தில் இன்றிரவு ஜப்பானும், குரோஷியாவும் மோதியது.

22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தார் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலிறுதிக்கு தகுதி பெறும் 2ஆவது சுற்று ஆட்டத்தில் இன்றிரவு ஜப்பானும், குரோஷியாவும் மோதியது. இந்த ஆட்டத்தில் ஜப்பான் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் குரோஷியா வீழ்த்தியது.
இன்று இரவு அல் ஜனெளப் ஸ்டேடியத்தில் ஆட்டத்தில் ஜப்பானும், குரோஷியாவும் மோதியது. முதல் கோலை ஜப்பான் அணியின் வீரர் டைசன் மயிடா வலைக்குள் செலுத்தினார். இதையடுத்து, குரோஷியோ வீரர் இவன் பெரிசிக் 55ஆவது நிமிடத்தில் கோலை அடித்தார்.
ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தது. இதையடுத்து கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அதிலும் முதல் பாதி அதாவது 15 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் போடவில்லை.
இந்த ஆட்டத்தைப் பொருத்தவரை குரோஷியா வசமே பந்தின் வசம் அதிகம் (58 சதவீதம்) இருந்தது.
இதனிடையே, கூடுதல் நேரத்திலும் (30 நிமிடங்கள்) இரு அணிகளுமே கோல் போடவில்லை. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
அதில் முதல் இரண்டு கோல்களை குரோஷியோ அடித்தது. 3ஆவது கோல் முயற்சியை ஜப்பான் கோல் கீப்பர் தடுத்தார். அதேநேரம், 2 கோல் முயற்சிகளை பயன்படுத்தி கோல் அடிக்காமல் போனது ஜப்பான். மூன்றாவது முயற்சியால் ஒரு கோல் அடித்து நம்பிக்கையுடன் இருந்தது.
PASALIC SCORES!!#JPN: ❌❌✅❌#HRV: ✅✅❌✅
— FIFA World Cup (@FIFAWorldCup) December 5, 2022
எனினும், குரோஷியா அடுத்த வாய்ப்பில் மூன்றாவது கோலை பதிவு செய்தது. இதையடுத்து குரோஷியா அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அந்த அணி காலிறுதிக்குள் நுழைந்தது.
Into the final 15 minutes!#FIFAWorldCup | #Qatar2022
— FIFA World Cup (@FIFAWorldCup) December 5, 2022
இந்தத் தொடரில் ஜப்பான் அணி இ பிரிவில் இடம்பெற்றிருந்தது. தனது முத்ல லீக் ஆட்டத்திலேயே முன்னாள் சாம்பியன் ஜெர்மனியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. இன்று இரவு அல் ஜனெளப் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் ஜப்பானும், குரோஷியாவும் மோதுகிறது.
இந்தத் தொடரில் ஜப்பான் அணி இ பிரிவில் இடம்பெற்றிருந்தது. தனது முத்ல லீக் ஆட்டத்திலேயே முன்னாள் சாம்பியன் ஜெர்மனியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது.
22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தார் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலிறுதிக்கு தகுதி பெறும் 2ஆவது சுற்று ஆட்டம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. குரூப் சுற்றில் பட்டியலில் டாப் 2 இடங்களைப் பிடித்த அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றான நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. நாக்-அவுட் சுற்றின் முதல் ஆட்டம் கடந்த 3-ஆம் தேதி நடந்தது. அந்த ஆட்டத்தில் சர்வதேச தரவரிசையில் 8-ஆவது இடத்தில் உள்ள நெதர்லாந்து அணி, தரவரிசையில் 16-ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவை எதிர்கொண்டது.
மூன்று முறை பைனலுக்கு முன்னேறியுள்ள நெதர்லாந்து அணி அந்த ஆட்டத்தில் அசத்தலாக 3 கோல்களை பதிவு செய்தது. அமெரிக்காவால் 1 கோலை மட்டுமே வலைக்குள் செலுத்த முடிந்தது. இதனால், காலிறுதிக்குள் நுழைந்த முதல் அணியாக நெதர்லாந்து தேர்வானது. அதேநாளில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா மோதின.
இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்த இரண்டாவது அணியானது.
காலிறுதியில் நடப்பு சாம்பியன்
இதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அணியான பிரான்ஸும், போலந்தும் மோதின. இதில், 3-1 என்ற கோல் கணக்கில் போலந்தை தும்சம் செய்து காலிறுதிக்குள் கம்பீரமாக அடியெடுத்து வைத்தது நடப்பு சாம்பியன் பிரான்ஸ்.
மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து அணி தரவரிசையில் 18-ஆவது இடத்தில் உள்ள செனகலை பந்தாடி, காலிறுதிக்குள் நுழைந்தது.
இதற்கு முன் ஜப்பான்
ஆனால், இந்த முறை ஜப்பான் அப்படி இல்லை. அதன் டிராக் ரெக்கார்டை எடுத்துப் பார்த்தால், குரூப் சுற்றில் இரண்டு ஐரோப்பிய அணிகளை வீழ்த்தியிருக்கிறது ஜப்பான். 4ஆவது முறையாக ஜப்பான் அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு உலகக் கோப்பை தொடரில் முன்னேறி இருக்கிறது. இதில் கடந்த 2 உலகக் கோப்பை தொடரையும் சேர்த்துக் கொள்ளலாம். எனினும், காலிறுதிக்குள் அந்த அணி இதுவரை ஒரு முறை கூட அடியெடுத்து வைத்ததில்லை.
இதற்கு முன்பு வடகொரியா 1966ஆம் ஆண்டிலும், தென் கொரியா 2002ஆம் ஆண்டிலும் காலிறுதிக்குள் நுழைந்துள்ளது. குரோஷியாவைப் பொருத்த வரை அந்த அணி மூன்றாவது முறையாக காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

