மேலும் அறிய

CSK : மாஸாக வந்து இறங்கிய தோனி.. வீடியோ எடுக்காமல் தடுத்த சிஎஸ்கே பாதுகாவலர்களால் பரபரப்பு

CSK : சிஎஸ்கே அணியின் பாதுகாப்புக்கு வந்த சிலர் செய்தியாளர்களை செய்தி சேகரிக்க விடாமலும் அவர்கள் மொபைலை பிடித்து கீழே தள்ளியும் வீடியோ எடுக்காமல் தடுத்தனர்

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை வீடியோ எடுக்காமல் தடுத்த சிஎஸ்கே அணியின் பாதுகாவலர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
 

நடப்பு ஐபிஎல் தொடர் மிகவும் சுவாரஸ்யமான கட்டத்தினை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் முடியும் தருவாயில் இருப்பதால் ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற, ஏற்கனவே வெளியேறிய மும்பை, பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளைத் தவிர மற்ற அணிகள் தீவிரமாக போராடி வருகின்றது. இதில் கொல்கத்தா அணி மட்டும் 19 புள்ளிகளை எட்டி முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. 

ப்ளேஆஃப் சுற்று

இந்நிலையில் பெரும்பாலான் ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் உள்ள பேச்சு என்றால் வரும் 18ஆம் தேதி நடைபெறும் போட்டியில் வெல்லபோவது யார்? ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார் என்பது கேள்வியாக உள்ளது. 18ஆம் தேதி நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளது. 

இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பினை பிரகாசப்படுத்திக் கொள்ளும். அதேநேரத்தில் பெங்களூரு அணி சென்னை அணி நிர்ணயம் செய்யும் இலக்கினை பெங்களூரு அணி 18.1 ஓவரில் எட்ட வேண்டும் அல்லது சென்னை அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். இவ்வாறு செய்தால் பெங்களூரு அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாகிவிடும். 

 சென்னை விமான நிலையம் வந்த வீரர்கள்

இதனை அடுத்து பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் இடையே பெங்களூரில் வருகின்ற 18ஆம் தேதி சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருக்கும் போட்டியில் பங்கு பெறுவதற்காக சிஎஸ்கே அணி வீரர்கள் விமானம் மூலம் பெங்களூரு செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தனர்.
 
அப்பொழுது வீரர்களை அங்குள்ள செய்தியாளர்கள் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த பொழுது, சிஎஸ்கே அணியின் பாதுகாப்புக்கு வந்த சிலர் செய்தியாளர்களை செய்தி சேகரிக்க விடாமலும் அவர்கள் மொபைலை பிடித்து கீழே தள்ளியும் வீடியோ எடுக்காமல் தடுத்தனர். இதனால் விமான நிலையத்திற்குள் செய்தியாளர்களுக்கும் சிஎஸ்கே அணியின் பாதுகாவலருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தநிலையில் செய்தியாளர்கள் வீடியோ எடுக்க விடாமல் தடுக்க உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது.  நீங்கள் யார் என அந்த நபரிடம் கேள்வி எழுப்பியதற்கு "   “தான் பிரசிடெண்ட் ஆப் இந்தியா " எனக் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார் .

ஆர்ப்பரித்த ரசிகர்கள்

 
சென்னை அணி வீரர்கள் வரும் தகவலை அறிந்த, சிஎஸ்கே ரசிகர்கள் அங்கு ஏராளமான குவிந்திருந்து தோனியை பார்த்த உடன் கத்தி கூச்சல் இட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  அதேபோன்று அங்கு இருந்த பொதுமக்கள் பலரும் தங்களுடைய செல்போனில் வீரர்களை புகைப்படம் எடுத்துக் கொண்டனர்
 

CSK, RCB என இரு அணிகளும் ப்ளேஆஃப் சுற்றுக்கு...

இந்நிலையில் இரு அணிகளும் ப்ளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பு இருக்கின்றது என்றால் நம்ப முடிகின்றதா? ஆமாம், சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் பெங்களூரு அணி சென்னை அணியின் ரன் ரேட்டினை பெரிதளவு பாதிப்பினை ஏற்படுத்தாமல் வெற்றியை பதிவு செய்ய வேண்டும். 

மேலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனக்கு மீதமுள்ள இரண்டு போட்டிகளில் படுதோல்வியைச் சந்திக்க வேண்டும். அதாவது சன்ரைசர்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு எதிராக படுதோல்வியைச் சந்தித்தால், தற்போது 14 புள்ளிகளில் இருக்கும் ஹைதராபாத் அணி தொடர்ந்து அதே புள்ளிக்கணக்கில் நீடிப்பதுடன், படுதோல்வியினால் ஹைதராபாத் அணியின் ரன்ரேட் மைனஸ்க்குச் செல்லும். இதன் மூலம் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். 

தலைப்பு செய்திகள்

Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Ajinkya Rahane Pension: ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
Nexon Rival: நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
Embed widget