மேலும் அறிய

AUS vs ZIM: கங்காருவை கதம் செய்த ஜிம்பாப்வே... டி20 உலகக்கோப்பை 2026-ல் முதல் அப்செட்.. ஆஸி அணிக்கு முதல் தோல்வி

கொழும்புவில் நடந்த இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி நிர்ணயித்த 169 இலக்கை எட்ட முடியாமல் 146 ஆல் அவுட்டானது ஆஸ்திரேலிய அணி.

டி20 உலகக்கோப்பை 2026-ல் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது, கொழும்புவில் நடந்த இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி நிர்ணயித்த 170 இலக்கை எட்ட முடியாமல் 146 ஆல் அவுட்டானது ஆஸ்திரேலிய அணி.

டி20 உலகக்கோப்பை: 

இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது, 20 அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது, இந்த முறை அசோசியட் அணிகள் பெரிய அணிகளுக்கு மிகப்பெரிய தலைவலியாக உள்ளது, நேபாள், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய கடைசி வரை போராடி தோல்வியடைந்தது. இந்த நிலையில் இன்று இலங்கையின் கொழும்புவில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதின. 

ஜிம்பாப்வே 169: 

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது,அதன் படி ஜிம்பாப்வே அணியில் பிரையன் பென்னட் மற்றும் மருமாணி ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார். இருவரும் நிதானமாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்தனர். இதன் பின் ரையன் பர்ல் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை சீராக உயர்த்தினர், 35 ரன்கள் எடுத்த நிலையில் ரையன் பர்ல் ஆட்டமிழந்தார். இதன் பின் களமிறங்கிய கேப்டன் சிக்கந்தர் ராசா 13 பந்துகளில்  25 ரன்கள் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 2 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியில் ஸ்டோய்னிஸ் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 

ஆஸ்திரேலிய தோல்வி: 

170 ரன்கள் என்கிற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஜிம்பாப்வே அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் பிராட் எவன்ஸ் மற்றும் பிளெஸ்ஸிங் முசரபானி பவர்பிளேவிலேயே அதிர்ச்சி அளித்தனர். 29 ரன்கள் எடுப்பதற்குள் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதில் கேமரூன் கிரீன் மற்றும் டிம் டேவிட் ஆகியோர் டக் அவுட்டாகினர். இதன் பின்னர் மேத் ரென்ஷா மற்றும் மேக்ஸ்வெல் அணியை சரிவிலிருந்து மீட்க போரடினர். அணியின் ஸ்கோர் 105 ஆக உயர்ந்த போது மேக்ஸ்வெல் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின் ரென்ஷா ஒரு பக்கம் போராட மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 19.3 ஓவர்களில் 146 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது, ஆஸ்திரேலிய அணிக்காக கடைசிவரை போராடிய ரென்ஷா 65 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜிம்பாப்வே அணியில் முசர்பாணி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை பெற்றார். 

ஜிம்பாப்வே அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இதுவரை இரண்டு முறை டி20 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடி அதில் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது, இதற்கு முன்னர் 2007 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த முதலாவது டி20 உலகக்கோப்பை போட்டியில் ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணியை ஜிம்பாப்வே அணி வீழ்த்தியிருந்தது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Embed widget