Yogi Babu:"நானும் ஆரம்ப காலத்தில் கிரிக்கெட் விளையாடிய ஒருவன் தான்" -நடிகர் யோகிபாபு
நடராஜன் போன்று நானும் மைதானம் அமைத்து நிறையபேரை உருவாக்கலாம் என ஆசை வருகிறது.
சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி பகுதியில் கிரிக்கெட் வீரர் நடராஜன் உருவாக்கிய புதிய கிரிக்கெட் மைதானம் இன்று திறக்கப்பட்டது. இதில் திரைப்பட காமெடி நடிகர் யோகி பாபு கலந்து கொண்டார். இதைதொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியது,” தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கம் கொடுக்க ஆள் இல்லாமல் இருந்தனர். நான் பார்த்து முதன்முறையாக நடராஜன் தமிழக மக்களுக்காக, வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்காக பெரிய உதவி செய்திருக்கிறார். இதன் மூலமாக தமிழகத்தில் கிராமங்களில் இருந்து நிறைய கிரிக்கெட் வீரர்கள் வரவேண்டும். அதுதான் நமது ஆசை. நடராஜன் அதற்கு முதல் முறையாக மைதானம் ஆரம்பித்துள்ளார். அதற்கு எனது வாழ்த்துக்கள்.
வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்கள் உங்களது எண்ணங்களிலிருந்து மாறாதீர்கள். நானும் ஆரம்ப காலகட்டத்தில் கிரிக்கெட் விளையாடிய ஒருவன் தான். இலக்கை தவறவிடாமல் வந்தால் வெற்றி பெறமுடியும். இந்த மைதானத்தை பார்க்கும்போது நானும் ஒரு மைதானம் கட்டலாம் என தோன்றுகிறது. நடராஜன் போன்று நானும் நிறையபேரை உருவாக்கலாம் என ஆசை வருகிறது. கண்டிப்பாக கடவுள் புண்ணியத்தில் அது நடக்கும். தமிழகத்திலிருந்து வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர், வருண் சக்கரவர்த்தி, தினேஷ் கார்த்திக் ஆகியோர் பெரிய வீரர்களாக உள்ளனர். இவர்கள் வளர்ந்து வரும் தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக உள்ளனர்.
உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறை அமைச்சராக ஆன பிறகு அவரது பணியில் அவர் சிறப்பாக உள்ளார். எனக்கு அனைத்து கிரிக்கெட் வீரர்களையும் பிடிக்கும். மிகவும் பிடித்த வீரர் வீரேந்திர சேவாக், அடுத்ததாக நடராஜ் பிடிக்கும். கஷ்டப்பட்டு வரும் அனைவரையும் எனக்கு பிடிக்கும். அடுத்ததாக நான் ஒரு கிரிக்கெட் படத்தில் நடிக்கிறேன். பொம்மை நாயகி இயக்குனர் ஷாம் அந்த படத்தை இயக்க உள்ளார் பேசினார். நடிகர் விஜய் பாஸ் பண்ண மாணவர்களுடன் பேசி இருந்தார், அதேபோன்று தோல்வியுற்ற மாணவர்களுக்கும் என்ன செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளனர். ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் என விஜய் கூறியது போன்று மண்டேலா படத்தில் நாங்கள் கூறியிருந்தோம்” என்று கூறினார்.