WTC Final 2023: களைகட்டிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்.. சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்கள் யார்? யார்?
2021-23 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியானது ஜூன் 7 (இன்று) முதல் 11 வரை லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
2021-23 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் லீக் சுற்று முடிவின் அடிப்படையில் ஆஸ்திரேலிய அணியும், இந்திய அணி முதல் இரண்டு அணிகளாக தகுதிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி தகுதிபெறுவது இதுவே முதல்முறை. கடந்த 2021ல் நடந்த முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அந்த போட்டியில் நியூசிலாந்திடம் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்தநிலையில், 2021-23 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
WTC 2021-23 ல் சிறப்பாக விளையாடிய டாப் 5 இந்திய பேட்ஸ்மேன்கள்:
WTC 2021-23 ல் புஜாரா 30 இன்னிங்ஸ்கள் விளையாடி ஒரு சதம் மற்றும் 6 அரைசதங்களுடன் 887 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்த இந்திய அணி பேட்ஸ்மேன்களில் முதலிடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் கோலி 869 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும், பண்ட் 868 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும் இருக்கிறார்.
பேட்ஸ்மேன்கள் | இன்னிங்ஸ்கள் | ரன்கள் | அதிகபட்ச ஸ்கோர் | 100 | 50 |
புஜாரா | 30 | 887 | 102* | 1 | 6 |
விராட் கோலி | 28 | 869 | 186 | 1 | 3 |
ரிஷப் பண்ட் | 21 | 868 | 146 | 2 | 5 |
ரோகித் சர்மா | 17 | 700 | 127 | 2 | 2 |
ரவீந்திர ஜடேஜா | 19 | 673 | 175 | 2 | 3 |
WTC 2021-23 ல் சிறப்பாக விளையாடிய டாப் 5 இந்திய பந்துவீச்சாளர்கள்:
WTC 2021-23 ல் அஸ்வின் 26 இன்னிங்ஸ்களில் 19.67 சராசரியுடன் 61 விக்கெட்களுடன் அதிக விக்கெட்கள் எடுத்த இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக பும்ரா 19 இன்னிங்ஸ்களில் 45 விக்கெட்களுடன் இரண்டாவது இடத்திலும், ஜடேஜா 23 இன்னிங்ஸ்களில் 43 விக்கெட்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
பந்துவீச்சாளர்கள் | இன்னிங்ஸ் | விக்கெட்கள் | சிறந்த பந்துவீச்சு | சராசரி | 5 விக்கெட் |
ரவிசந்திரன் அஸ்வின் | 26 | 61 | 6/91 | 19.67 | 2 |
ஜஸ்பிரித் பும்ரா | 19 | 45 | 5/24 | 19.73 | 3 |
ரவீந்திர ஜடேஜா | 23 | 43 | 7/42 | 23.23 | 3 |
முகமது ஷமி | 23 | 41 | 5/44 | 27.12 | 1 |
முகமது சிராஜ் | 23 | 31 | 4/32 | 32.86 | - |
கணிக்கப்பட்ட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி:
இந்தியா - ரோகித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர்.
ஆஸ்திரேலியா - டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), நாதன் லியான், ஸ்காட் போலண்ட்.