WPL 2024: மகளிர் ப்ரீமியர் லீக் முதல் போட்டி! நடப்புச் சாம்பியன் மும்பையை நாளை வீழ்த்துமா டெல்லி?
WPL 2024: மகளிர் ப்ரீமியர் லீக் போட்டி நாளை அதாவது பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் மும்பை - டெல்லி அணிகள் மோதுகின்றன.
இந்தியாவில் நடைபெற்று வரும் லீக் போட்டிகள் அதிக வரவேற்பைப் பெற்ற லீக் போட்டி என்றால் அது கிரிக்கெட்டிற்காக நடத்தப்படும் லீக் போட்டிதான். தொடக்கத்தில் ஆண்கள் விளையாடுவதற்கு மட்டும் நடத்தப்பட்ட லீக் போட்டி, தற்போது பெண்களுக்கும் நடத்தப்படுகின்றது.
இதற்கான வரவேற்பு எதிர்பார்க்கப்பட்டதை விடவும் அதிகமாக இருந்ததால், இரண்டாவது சீசன் இந்த ஆண்டு நடத்தப்படுகின்றது. கடந்த ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்ட WPL லீக் தொடரானது, இந்த ஆண்டு நாளை அதாவது பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கவுள்ளது. மார்ச் 17ஆம் தேதி வரை நடைபெறும் இந்த WPL 2024இல் மொத்தம் 5 அணிகள் களமிறங்குகின்றது.
இதில் நாளை முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோதவுள்ளது. இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது.
WPL 2024 அட்டவணை
தேதி | போட்டிகள் | நேரம் | இடம் |
பிப்ரவரி 23 | மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் | இரவு 7.30 | எம் சின்னசாமி ஸ்டேடியம் |
பிப்ரவரி 24 | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs யுபி வாரியர்ஸ் | இரவு 7.30 | எம் சின்னசாமி ஸ்டேடியம் |
பிப்ரவரி 25 | குஜராத் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் | இரவு 7.30 | எம் சின்னசாமி ஸ்டேடியம் |
பிப்ரவரி 26 | UP வாரியர்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் | இரவு 7.30 | எம் சின்னசாமி ஸ்டேடியம் |
பிப்ரவரி 27 | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs குஜராத் ஜெயண்ட்ஸ் | இரவு 7.30 | எம் சின்னசாமி ஸ்டேடியம் |
பிப்ரவரி 28 | மும்பை இந்தியன்ஸ் vs UP வாரியர்ஸ் | இரவு 7.30 | எம் சின்னசாமி ஸ்டேடியம் |
பிப்ரவரி 29 | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs டெல்லி கேபிடல்ஸ் | இரவு 7.30 | எம் சின்னசாமி ஸ்டேடியம் |
மார்ச் 1 | UP வாரியர்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ் | இரவு 7.30 | எம் சின்னசாமி ஸ்டேடியம் |
மார்ச் 2 | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs மும்பை இந்தியன்ஸ் | இரவு 7.30 | எம் சின்னசாமி ஸ்டேடியம் |
மார்ச் 3 | குஜராத் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் | இரவு 7.30 | எம் சின்னசாமி ஸ்டேடியம் |
மார்ச் 4 | UP வாரியர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | இரவு 7.30 | எம் சின்னசாமி ஸ்டேடியம் |
மார்ச் 5 | டெல்லி கேபிடல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் | இரவு 7.30 | அருண் ஜெட்லி மைதானம் |
மார்ச் 6 | குஜராத் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | இரவு 7.30 | அருண் ஜெட்லி மைதானம் |
மார்ச் 7 | UP வாரியர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் | இரவு 7.30 | அருண் ஜெட்லி மைதானம் |
மார்ச் 8 | டெல்லி கேபிடல்ஸ் vs UP வாரியர்ஸ் | இரவு 7.30 | அருண் ஜெட்லி மைதானம் |
மார்ச் 9 | மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ் | இரவு 7.30 | அருண் ஜெட்லி மைதானம் |
மார்ச் 10 | டெல்லி கேபிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | இரவு 7.30 | அருண் ஜெட்லி மைதானம் |
மார்ச் 11 | குஜராத் ஜெயண்ட்ஸ் vs UP Warriorz | இரவு 7.30 | அருண் ஜெட்லி மைதானம் |
மார்ச் 12 | மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | இரவு 7.30 | அருண் ஜெட்லி மைதானம் |
மார்ச் 13 | டெல்லி கேபிடல்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ் | இரவு 7.30 | அருண் ஜெட்லி மைதானம் |
மார்ச் 15 | எலிமினேட்டர் | இரவு 7.30 | அருண் ஜெட்லி மைதானம் |
மார்ச் 17 | இறுதிப்போட்டி | இரவு 7.30 | அருண் ஜெட்லி மைதானம் |
நேரடி ஸ்ட்ரீமிங் மற்றும் டெலிகாஸ்ட் விவரங்கள்:
இந்தியாவில் எந்த டிவி சேனல் WPL 2024 போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பும்?
ஸ்போர்ட்ஸ் 18
இந்தியாவில் WPL போட்டிகளின் நேரடி ஒளிபரப்பை எப்படி பார்ப்பது?
லைவ் ஸ்ட்ரீமிங்கை ரசிகர்கள் ஜியோ சினிமாஸில் பார்க்கலாம்.