MI-W vs RCB-W, 1 Innings Highlight: மும்பை அணியிடம் மீண்டெழுந்து அடிவாங்கிய பெங்களூரு அணி... 155 ரன்களுக்கு ஆல்-அவுட்..!
WPL 2023, MI-W vs RCB-W: மகளிர் பிரிமீயர் லீக் தொடரில் மும்பை அணிக்கெதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 155 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
மகளிர் பிரிமீயர் லீக் தொடரில் மும்பை அணிக்கெதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 155 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
இந்தியாவில் மகளிருக்கான டி20 ஓவர் பிரிமியர் லீக் தொடர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த மார்ச் 4 ஆம் தேதி கோலகலமாக தொடங்கியது. மொத்தம் டெல்லி, மும்பை, பெங்களூரு, உத்தரப்பிரதேசம், குஜராத் ஆகிய 5 அணிகள் மட்டுமே பங்கேற்றுள்ளது. இதுவரை 3 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் பெங்களூரு, குஜராத் அணிகள் தவிர 3 அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது.
இதனிடையே மகளிர் பிரிமீயர் லீக் தொடரின் 4வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. மும்பையில் உள்ள Brabourne மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணியில் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 23 ரன்கள், ரிச்சா கோஷ் 28 ரன்கள், ஸ்ரேயங்கா படேல் 23 ரன்கள், கனிகா அகுஜா 22 ரன்கள் மேகன் ஷட் 20 ரன்கள் எடுக்க 20 ஓவர்களில் அந்த அணி 155 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஒரு கட்டத்தில் நல்ல நிலையில் இருந்த பெங்களூரு அணி எளிதாக 170 ரன்களை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி கட்டத்தில் மும்பை அணியின் பந்து வீச்சு பெங்களூரு அணியை நிலைகுலைய செய்தது.
மும்பை அணி தரப்பில், ஹெய்லி மேத்யூஸ் 3 விக்கெட்டுகளையும், சைகா இஷாக், அமீலியா கெர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியுள்ளது.