MI-W vs UPW-W, Match Highlights: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மும்பை.. 4 விக்கெட்களை வீழ்த்தி வாங் கலக்கல்!
உபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்றில் மும்பை அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது.
![MI-W vs UPW-W, Match Highlights: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மும்பை.. 4 விக்கெட்களை வீழ்த்தி வாங் கலக்கல்! WPL 2023: MI-W won the match by 72 runs against UPW-W in Match 21 qualified for Final MI-W vs UPW-W, Match Highlights: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மும்பை.. 4 விக்கெட்களை வீழ்த்தி வாங் கலக்கல்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/24/833b232d3f38859c5a54233805e57ed81679678457327571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மும்பை அணி நிர்ணயித்த 183 ரன்களை இலக்காக கொண்டு உபி வாரியர்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஹூலி மற்றும் ஸ்வேதா செஹ்ராவத் சொற்ப ரன்களில் ஏமாற்றம் அளித்தனர். உபி வாரியர்ஸ் அணி 12 ரன்களுக்குள் அடுத்தடுத்து 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
அடுத்து களமிறங்கிய்ட கிரண் நவ்கிரே ஒரு முனையில் நங்கூரமாய் நிற்க, பின் வரிசை வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினார்.
6 பந்துகளில் 7 ரன்கள் எடுத்திருந்த தஹ்லியா மெக்ராத் ரன் அவுட் முறையில் வெளியேற, 10 ஓவர் முடிவில் உபி வாரியர்ஸ் அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 63 ரன்கள் எடுத்திருந்தது.
43 ரன்கள் அடித்திருந்த கிரண் நவ்கிரே அவுட்டாக, அவரை தொடர்ந்து சிம்ரன் ஷேக் மற்றும் எலிக்ஸ்டன் அவுட்டானார். இதையடுத்து வாங் ஹாட் ரிக் விக்கெட்டை எடுத்து அசத்தினார்.
WWW - 𝐅𝐈𝐑𝐒𝐓 𝐄𝐕𝐄𝐑 𝐇𝐀𝐓-𝐓𝐑𝐈𝐂𝐊 IN THE #WPL! 🔥#OneFamily #MumbaiIndians #AaliRe #WPL2023 #MIvUPWpic.twitter.com/JxJ0kecQ6S
— Mumbai Indians (@mipaltan) March 24, 2023
தொடர்ந்து உள்ளே வந்த அஞ்சலி 5 ரன்களில் ஜிந்திமணி கலிதா பந்தில் க்ளீன் போல்டாக, 23 பந்துகளில் 78 ரன்கள் உபி வாரியர்ஸ் அணிக்கு தேவையாக இருந்தது. தொடர்ந்து இஷாக் பந்தில் ராஜேஸ்வரி எல்பிடபிள்யூ முறையில் வெளியேற, மும்பை அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது.
உபி வாரியர்ஸ் அணியில் கிரண் நவ்கிரே அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்திருந்தார். மும்பை அணி சார்பில் வாங் 4 விக்கெட்களும், இஷாக் 2 விக்கெட்களும், மேத்யூஸ் மற்றும் கலிதா தலா ஒரு விக்கெட்களும் எடுத்திருந்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)