World Cup Points Table: ஆப்கானிஸ்தானை பின்னுக்கு தள்ளிய பாகிஸ்தான்.. புள்ளிப்பட்டியலில் 5-வது இடம்.. யார் முதலிடம்?
ஆப்கானிஸ்தான் 6 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்றுள்ள நிலையில், பாகிஸ்தான் அணி 7 போட்டிகளில் 3ல் வெற்றிபெற்றுள்ளது.
கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நேற்று நடைபெற்ற போட்டியில் வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது. இதன்மூலம், உலகக் கோப்பை 2023ல் பாகிஸ்தான் அணி தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்து அரையிறுதிக்கு தகுதிபெறும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறது.
இந்த வெற்றிக்கு பிறகு பாகிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் ஆப்கானிஸ்தானை பின்னுக்கு தள்ளி 5வது இடத்திற்கு முன்னேறியது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தலா 6 புள்ளிகளை பெற்றிருந்தாலும், நிகர ரன் ரேட் அடிப்படையில் முன்னிலையில் உள்ளது. இங்கிருந்து அரையிறுதிக்கு செல்வது பாகிஸ்தான் அணிக்கு எளிதானது அல்ல. அடுத்த இரண்டு போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற்றாலும், மற்ற அணிகளின் முடிவுகளை பொறுத்தே முடிவு தெரியும். பாகிஸ்தானுடன் ஆப்கானிஸ்தான் அணியும் அரையிறுதிக்கான போட்டியில் உள்ளது.
ஆப்கானிஸ்தான் 6 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்றுள்ள நிலையில், பாகிஸ்தான் அணி 7 போட்டிகளில் 3ல் வெற்றிபெற்றுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், ஆப்கானிஸ்தான் அடுத்த அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு வலுவான போட்டியாளராக மாற முடியும்.
அதே சமயம் பாகிஸ்தானின் வெற்றியால் டாப்-4ல் எந்த மாற்றமும் இல்லை. போட்டியை நடத்தும் இந்திய அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து தென் ஆப்பிரிக்கா 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. பின்னர் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தலா 8 புள்ளிகளுடன் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளன. மூன்றாவது இடத்தில் உள்ள நியூசிலாந்து நிகர ரன் ரேட் +1.232 மற்றும் நான்காவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா நிகர ரன் ரேட் +0.970.
தரவரிசை |
நாடுகள் |
வெற்றி |
தோல்வி |
ரன் ரேட் |
புள்ளிகள் |
1 |
இந்தியா |
6 |
6 |
+1.405 |
12 |
2 |
தென்னாப்பிரிக்கா |
6 |
5 |
+2.032 |
10 |
3 |
நியூசிலாந்து |
6 |
4 |
+1.232 |
8 |
4 |
ஆஸ்திரேலியா |
6 |
4 |
+0.970 |
8 |
5 |
பாகிஸ்தான் |
7 |
3 |
-0.024 |
6 |
6 |
ஆப்கானிஸ்தான் |
6 |
3 |
-0.718 |
6 |
7 |
இலங்கை |
6 |
2 |
-0.275 |
4 |
8 |
நெதர்லாந்து |
6 |
2 |
-1.277 |
4 |
9 |
வங்கதேசம் |
7 |
1 |
-1.446 |
2 |
10 |
இங்கிலாந்து |
6 |
1 |
-1.652 |
2 |
மற்ற அணிகளின் நிலைமை என்ன..?
மீதமுள்ள அணிகளில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தலா 6 புள்ளிகளுடன் ஐந்தாம் மற்றும் ஆறாவது இடங்களில் உள்ளன. பாகிஸ்தானின் நிகர ஓட்ட விகிதம் மைனஸ் -0.024 ஆகவும், ஆப்கானிஸ்தானின் நிகர ரன் விகிதம் மைனஸ் -0.718 ஆகவும் உள்ளது. இதைத் தொடர்ந்து, இலங்கை 4 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும், மைனஸ் -0.275 என்ற நிகர ரன்ரேட்டுடனும், நெதர்லாந்து 4 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும், மைனஸ் -1.277 நிகர ரன்ரேட்டுடன், வங்கதேசம் 2 புள்ளிகளுடன் நெகடிவ் -1.446 நிகர ரன்ரேட்டுடன் ஒன்பதாவது இடத்திலும், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வெறும் 2 புள்ளிகளுடன் மைனஸ் - 1.652 நிகர ரன் ரேட் உடன் பத்தாவது இடத்தில் உள்ளது.
நேற்றைய போட்டி சுருக்கம்:
டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். முதலில் பேட் செய்ய வந்த ஷகிப் அல் ஹசன் அணி 45.1 ஓவரில் 204 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக மஹ்முதுல்லா 70 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர்களுரன் 56 ரன்கள் குவித்தார். வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் 64 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்தார். இது தவிர வங்கதேசத்தின் மற்ற பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளித்தனர்.
பாகிஸ்தானுக்கு 205 ரன்கள் வெற்றி இலக்காக இருந்தது. பாகிஸ்தான் 32.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.