AUS vs BAN World Cup 2023: அதிக வெற்றிகள், ஒரு முறை மட்டுமே தோல்வி.. ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா.. பழிதீர்க்குமா வங்கதேசம்?
ஆஸ்திரேலியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டி பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே...
உலகக் கோப்பை 2023ன் 43வது போட்டியில் இன்று வங்கதேச அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோத இருக்கின்றன. 5 முறை சாம்பியனான ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அபார வெற்றிக்கு பிறகு களமிறங்குகிறது. இதற்கிடையில், வங்கதேச அணி தனது முந்தைய போட்டியில் இலங்கையை வீழ்த்திய பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்குகிறது.
இந்தநிலையில், ஆஸ்திரேலியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டி பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே...
நாள்: சனிக்கிழமை (நவம்பர் 11)
நேரம்: காலை 10:30 IST
இடம்: மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியம், புனே
லைவ் ஸ்ட்ரீமிங் ஆப்: Disney+Hostar
இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:
ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகள் 21 ஒருநாள் போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில் 19 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று, மிகப்பெரியளவில் முன்னிலை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு ஒருநாள் போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றுள்ளது.
மேலும், ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து ஏழு முறையும், சேஸிங்கில் 12 முறையும் வென்றுள்ளது. இலக்கை துரத்தியபோது வங்கதேசம் ஒரே ஒரு போட்டியில் வெற்றி பெற்றது.
ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில், இரு நாடுகளும் மூன்று முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இந்த மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வென்றுள்ளது.
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:
ஆஸ்திரேலியா:
டேவிட் வார்னர், டிஎம் ஹெட், மிட்செல் மார்ஷ், மார்னஸ் லாபுஷாக்னே, ஜேபி இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), ஜி மேக்ஸ்வெல், எம்பி ஸ்டோனிஸ், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஏ ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்
வங்கதேசம்:
லிட்டன் தாஸ், தன்சித் ஹசன், நஸ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), மஹ்முதுல்லா, தவ்ஹித் ஹ்ரிடோய், மெஹிதி ஹசன் மிராஸ், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம்
இன்று மழைக்கு வாய்ப்பா..?
ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசம் இடையேயான போட்டியில் மழையால் எந்த பாதிப்பும் ஏற்படாது என AccuWeather ஆப் கூறுகிறது. வெப்பநிலை 26 முதல் 32 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்பதால் ரசிகர்கள் இடையூறு இல்லாமல் விளையாட்டை கண்டு ரசிக்கலாம். புனேவில் உள்ள எம்சிஏ மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் எளிதாக ஸ்கோர் செய்வார்கள் என்பதால் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்யலாம். இங்கு கடந்த ஐந்து ஆட்டங்களில் சராசரி முதல் இன்னிங்ஸ் 304 ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2023 உலகக் கோப்பை ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசம் இடையிலான போட்டி எப்போது தொடங்கும்?
உலகக் கோப்பை 2023 ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசம் இடையிலான ஆட்டம் இந்திய நேரப்படி காலை 10:30 மணிக்கு தொடங்குகிறது.