Womens Asia Cup: ஆசிய மகளிர் கோப்பை கிரிக்கெட் போட்டி - இன்று இந்தியா - பாகிஸ்தான் மோதல், வெற்றி யாருக்கு?
Womens Asia Cup: ஆசிய மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று மோத உள்ளன.
Womens Asia Cup: ஆசிய மகளிர் கிரிக்கெட் போட்டி 8 அணிகளுடன் இலங்கையில் இன்று தொடங்குகிறது.
ஆசிய மகளிர் கிரிக்கெட் போட்டி:
ஆசிய கண்டத்தில் உள்ள 8 அணிகள் பங்கேற்கும், ஆசிய மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி இன்று இலங்கையில் தொடங்குகிறது. 8 அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அதன்படி, குரூப் ஏ-வில் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் பி-யில் வங்கதேசம், மலேசியா, இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. லீக் சுற்றின் முடிவில் இரண்டு பிரிவிவுகளிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.
இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்:
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நேபாளம் அணிகள் மோதுகின்றன. ராங்கிரி தம்புல்லா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது போட்டியில், நடப்பு சாம்பியனான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஹாட்ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
இந்திய அணியின் பலம், பலவீனங்கள்:
தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று விதமான போட்டிகளிலும், ஹர்மன் ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அபார வெற்றி கண்டது. அந்த உற்சாகத்திலேயே ஆசிய கோப்பையிலும் களமிறங்க உள்ளது. அதேநேரம், பாகிஸ்தான் அணியோ கடந்த மே மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஒருநாள் மற்றும் டி20 தொடரில் தோல்வியை தழுவியது. அந்த தொடரில் பாகிஸ்தானால் ஒரு வெற்றியை கூட பெறமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நேருக்கு நேர்:
சர்வதேச டி20 போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 14 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்திய அணி 11 முறையும், பாகிஸ்தான் அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
மைதானம் எப்படி?
ராங்கிரி தம்புலா மைதான மேற்பரப்பு சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவாக இருக்கும். சீமர்களுக்கு, ஸ்டிரிப் ஒரு நல்ல அளவு பவுன்ஸ் வழங்குகிறது. இது பேட்டிங் செய்வதை கடினமாக்குகிறது . டாஸ் வென்ற அணி முதலில் பேட்டிங் செய்து போர்டில் வலுவான இலக்கை நிர்ணயிப்பது வெற்றிக்கு உதவலாம்.
உத்தேச அணி விவரம்:
இந்திய பெண்கள் (IND-W): ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, தயாளன் ஹேமலதா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ரிச்சா கோஷ் (WK), தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், ராதா யாதவ், ஸ்ரேயங்கா பாட்டீல் , ரேணுகா தாக்கூர் சிங்
பாகிஸ்தான் பெண்கள் (PAK-W): ஒமைமா சோஹைல், முனீபா அலி (WK), சித்ரா அமின், அலியா ரியாஸ், நிடா தார் (கேப்டன்), சனா பாத்திமா, டயானா பைக், சாடியா இக்பால், துபா ஹாசன், ஜி பெரோசா, ஆயிஷா ஜாபர்