IND vs ENG Womens T20 : ரேணுகாவின் அதிரடி பந்துவீச்சு; 152 ரன் இலக்கு; அரையிறுதி வாய்ப்பைப் பெறுமா இந்தியா?
Womens T20 WorldCup IND Vs ENG : டி20 மகளிர் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா 152 ரன் எடுத்தால் வெற்றி என்று களமிறங்க உள்ளது,
டி20 மகளிர் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா 152 ரன் எடுத்தால் வெற்றி என்று களமிறங்க உள்ளது,
தென் ஆப்பிரிக்காவில் 8-வது மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் இந்திய அணி குரூப் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதில் இங்கிலாந்து, அயர்லாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் அணிகளும் இடம் பெற்றுள்ளன. பாகிஸ்தான் அணியுடனான முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
அரை இறுதி வாய்பை உறுதி செய்வதற்கான மூன்றாவது போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
போர்ட் எலிசபெத் நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மைதனாத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இங்கிலாந்து சார்பில் களமிறங்கிய சோபியா டங்க்ளே, டேனி வெயாட் இருவரும் நிதானமாக ஆட தொடங்கினர். ஆனால், இந்தியாவின் ரேணுகா சிங்கின் சிறப்பான பந்து வீச்சில் பவர் ப்ளே ஓவர்களில் பெரிதாக அவர்களால் ஜொலிக்க முடியவில்லை. இரண்டாவது பந்திலேயே வெயாட் அவுட் ஆனார். சோஃபியாவும் பத்து ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அடுத்ததாக களமிறங்கிய அலைஸ் கேப்சி, நாட் கூட்டணி சிறப்பாக விளையாடியது.
இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக நாட் பண்ட் 50 ரன்களும், ஏமி ஜோன்ஸ் 40 ரன்களும் எடுத்தனர்.
இந்தியா சார்பில் ரேணுகா சிங் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 15 ரன்களுக்கு 5 விக்கெட்களை எடுத்தார். தீப்தி மற்றும் ஷிகா பாண்டே தலா ஒரு விக்கெட் எடுத்தனர். கடந்த 10-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 26-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தியா உட்பட மொத்தம் 10 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. குரூப் மற்றும் நாக்-அவுட் என 23 போட்டிகள் நடைபெறுகின்றன.
ஹெட் டு ஹெட்:
சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டிகளில் இவ்விரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 19-ல் இங்கிலாந்தும், 7-ல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக டி-20 உலகக் கோப்பையை தொடர்களை பொறுத்தமட்டில், இரு அணிகளும் 5 முறை மோதியதில் அனைத்திலும் இங்கிலாந்து அணி வெற்றி மட்டுமே பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 7விக்கெட்கள் எடுத்து 151 ரன்கள் எடுத்தது. இன்றைய போட்டியில் வென்று இந்திய அணி வரலாற்றை மாற்றி அமைக்குமா என ரசிகர்களிடையே ஆர்வம் எழுந்துள்ளது.'