Sourav Ganguly : உலகக்கோப்பைக்கு பிறகு கங்குலி டார்கெட் செய்வது இதுதானா? கிரிக்கெட் அரங்கில் நடப்பது என்ன?
Sourav Ganguly: டி20 உலககோப்பை தொடருக்குப் பிறகு பிசிசிஐ தலைவர் சவுராவ் கங்குலி ஐசிசியின் தலைவர் ஆகவிருப்பதாக கூறப்படுகிறது. அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
Sourav Ganguly: டி20 உலககோப்பை தொடருக்குப் பிறகு பிசிசிஐ தலைவர் சவுராவ் கங்குலி ஐசிசியின் தலைவர் ஆகவிருப்பதாக கூறப்படுகிறது. அவருக்குப் பிறகு ஜெய் ஷா பிசிசிஐ தலைவராக திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது, அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
பிசிசிஐயின் தலைவராக உள்ளவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் இடக்கை பேட்ஸ்மேனுமான சவுராவ் கங்குலி. இவர் கடந்த 2019 ஆண்டில் இருந்து இந்தியத் தலைமைக் கிரிக்கெட் ஆணையத்தின் தலைவராக பதவி வகித்து வருகிறார். உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி பிசிசிஐயின் தலைவராக சவுரவ் கங்குலியும், செயலாளராக ஜெய் ஷாவும் 2025ஆம் ஆண்டு வரை தொடரலாம் என அறிவித்தது. இதில், வரும் நவம்பர் மாதத்துடன் ஐசிசியையின் தலைவருக்கான பதவிக்காலம் முடிவடையவிருப்பதால், அந்த பதவிக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.
ஐசிசி கடந்த 2014ஆம் ஆண்டில் இந்திய தலைமை கிரிக்கெட் ஆணையம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஆணையம் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆகியவை இணைந்து உலக கிரிக்கெட்டை நடத்த முடிவு செய்து, ஐசிசி எனும் அமைப்பை உருவாக்கியது. ஐசிசியின் முதல் தலைவராக பொறுப்பெற்றவர், அப்போதைய இந்திய தலைமை கிரிக்கெட் ஆணையத்தின் தலைவராக இருந்த, நாராயணசாமி சீனிவாசன் பொறுப்பு வகித்தார். ஐசிசியின் முதல் தலைவர் தனது பொறுப்பில் மொத்தம் ஒரு வருடம் 136 நாட்கள் பதவி வகித்தார். இதனை தொடர்ந்து இராண்டாவது தலைவராக பொறுப்பேற்றவரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஷஷாங்க் மனோகர் ஆவார். அவரைத் தொடர்ந்து, ஐசிசியின் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து வந்த சிங்கப்பூரின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் க்வாஜா கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை பொறுப்பு வகித்தார். 2020 நவம்பரில் நடைபெற்ற தலைவர் பொறுப்புக்கான தேர்தலில், நியூசிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜார்ஜ் பெர்காலே பொறுப்பு வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் முடிவடையவிருப்பதால், டி20 உலகோப்பைத் தொடருக்குப் பிறகு, ஐசிசியின் தலைவருக்கான தேர்தல் நடத்த தலைமைக்குழுவால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில், பிசிசிஐ தலைவர் கங்குலி போட்டியிடவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 16 உறுப்பினர்கள் வாக்களிக்கவுள்ள இந்த தேர்தலில் 51% வாக்குகள் பெறுபவர்கள் வெற்றி பெறுவார்கள். அதாவது, 9 வாக்குகள் பெறுபவர் வெற்றி பெற்று ஐசிசியின் தலைவராக பொறுப்பேற்பார். இந்த தேர்தலில் கங்குலி பங்கேற்றால் அவருக்கான வாய்ப்பு என்பது மிகவும் பிரகாசமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஐசிசியின் தலைவராக சவுராவ் கங்குலி தேர்ந்தெடுக்கப்பட்டால், பிசிசிஐயின் தலைமைப் பொறுப்பு காலியாகும். இந்த இடத்தில் பிசிசிஐயின் செயலாளராக உள்ள ஜெய் ஷா பிசிசிஐயின் தலைவரக பொறுப்பேற்பார். ஜெய் ஷா பிசிசிஐயின் தலைமைப் பொறுப்புக்கு வருவதற்காக கங்குலியை ஐசிசியை நோக்கி நகர்த்துவதாக கூறப்படுகிறது. கங்குலி ஐசிசியின் தலைவராக பொறுப்பேற்கும் பட்சத்தில், ஐசிசியின் தலைவராக பொறுப்பேற்கும் மூன்றாவது இந்தியர் எனும் பெருமையைப் பெறுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. T20 world Cup 2022: இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை மோதல்... விரைவாக விற்று தீர்ந்த டிக்கெட்
Virat Kohli: டி20 உலகக் கோப்பைக்கு பிறகு... கோலியின் ஓய்வு குறித்து பேசிய சோயிப் அக்தர்..!