Watch Video: விராட் கோலியுடன் மறக்க முடியாத தருணம்… வீடியோவை ரசித்து பார்த்த சூர்யகுமார் யாதவ்!
இருவருக்கும் இடையேயான இணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அவர் வெளியிட்டுள்ள விடியோ அமைந்துள்ளது. கோலியுடனான அந்த மறக்க முடியாத தருணத்தை கண்டு நெகிழ்கிறார் அந்த விடியோவில் சூர்யகுமார் யாதவ்.
விராட் கோலியுடன் இணைந்து அரைசதம் அடித்த பிறகு முடிவில் இருவரும் இணைந்து கொண்டாடிய வீடியோவை சூர்யகுமார் ரசித்து பார்க்கும் விடியோ தற்போது வரலாகி வருகிறது.
இந்திய அணியின் பேட்டிங் வரிசை
அசைக்கமுடியாத பேட்டிங் வரிசை கொண்டிருக்கிறது இந்திய அணி. கே.எல் ராகுல் மட்டும் ஃபார்முக்கு வந்துவிட்டால் இந்திய அணியின் பேட்டிங் வரிசை உலக அளவில் எந்த அணியாலும் அருகில் கூட நெருங்க முடியாத அளவுக்கு இருக்கும். நடந்து முடிந்துள்ள இரு போட்டிகளிலும் முதல் விக்கெட் விரைவாக போனாலும் தூண் போல் தாங்க கோலி இருந்துள்ளார். உடன் சூர்யகுமார் யாதவும் தன் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார். நான்கு பக்கங்களும் பந்துகளை சிதறடிக்கவல்ல ஷாட்கள் கைவசம் வைத்திருக்கிறார். இந்த பந்தை இந்த இடத்திலெல்லாம் அடிக்கலாம் என்று உலகிற்கு காட்டி வருகிறார். இந்த 2022 ஆம் ஆண்டு இவருக்கு ஒரு மறக்க முடியாத ஆண்டாக அமைந்திருக்கும். ஏனெனில் 25 போட்டிகளில் கிட்டத்தட்ட 900 ரன்கள் அடித்திருக்கிறார்.
நெதர்லாந்து போட்டி
உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியின் போதும் 25 பந்துகளில் 51 ரன்கள் விளாசினார். பாகிஸ்தான் போட்டியிலும் ரன் வேகம் குறையாமல் பார்த்துக்கொண்டார். நெதர்லாந்து போட்டியில் விராட் கோலியும் 44 பந்துகளில் 62 ரன்கள் எடுத்திருந்தார். இருவரும் சேர்ந்து மூன்றாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு 94 ரன்கள் குவித்து 179 ரன்களை அடைய உதவினர்.
வைரல் விடியோ
கடைசி சிக்ஸரை சூர்யகுமார் அடித்ததும் 45 ரன்னில் இருந்தவர் 51 எடுத்து அரைசதத்தை கடந்தார். ஆனால் பேட்டிங் முடிந்த களிப்பில் சிரித்துக்கொண்டிருந்த சூர்யகுமார் யாதவ் அதனை செலிபரேட் செய்ய மறந்துவிட்டார். அவரை திரும்பவும் ஞாபகப்படுத்தி விராட் கோலி பேட்டை தூக்கி கொண்டாடி அவரையும் கொண்டாட செய்தார். அந்த காட்சி இருவருக்கும் இடையிலான இணைப்பை மிகவும் அழகாக காட்டியது. அந்த விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி இருந்தது. அதனை பகிர்ந்த சூர்யகுமார் யாதவ் அதோடு அவர் அதனை கண்டு ரசிக்கும் வீடியோவையும் இணைத்திருந்தார். ஸ்க்ரீன் இரண்டாக பிரிக்கப்பட்டு இரண்டு வீடியோவும் ஒரே நேரத்தில் ஓடும்படியாக வெளியாகியுள்ள இந்த விடியோ தற்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram
சூர்-விர்
அவருக்கும் விராட் கோலிக்கும் இடையேயான இணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அவர் வெளியிட்டுள்ள விடியோ அமைந்துள்ளது. விராட் கோலியுடனான அந்த மறக்க முடியாத தருணத்தை கண்டு நெகிழ்கிறார் அந்த விடியோவில் சூர்யகுமார் யாதவ். ரோஹித் ஷர்மா உட்பட மூவரும் அரைசதம் அடிதிருந்தாலும் குறைந்த பந்துகளில் அடித்த சூர்யகுமார் யாதவுக்கு மேன் ஆப் தி மேட்ச் கிடைத்தது. போட்டிக்குப் பிறகு, கோஹ்லி சமூக ஊடகத்தில் விளையாட்டின் சில புகைப்படங்களை ஊக்கமளிக்கும் தலைப்புடன் பகிர்ந்து கொண்டார். "மற்றொரு ஸ்ட்ராங்கான வெற்றி" என்று கோஹ்லி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். சூர்யகுமார் அதற்கு "SurVIR" என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்தார். அது இருவரின் பெயர்களின் முதல் மூன்று எழுத்தைக் குறிக்கிறது. கோலி அதற்கு, "ஹாஹாஹா நல்ல வார்த்தை பிரதர்", என்றார்.