Dhoni New Ad Video: ஒரே வீடியோவில் வாழ்க்கை தத்துவத்தை சொன்ன தோனி..நெகிழ்ந்துபோன சேவாக் - வீடியோ!!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் புதிய விளம்பர வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தொடர்பான வீடியோ என்றால் சமூக வலைதளங்களில் எப்போதும் வேகமாக வைரலாவது வழக்கம். அந்தவகையில் தற்போது மீண்டும் அவர் தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இம்முறை முன்னாள் கேப்டன் தோனியை வைத்து அன் அகாடமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓடி கொண்டு தன் பாதையில் இருக்கும் சுவர்களை உடைத்து கொண்டு செல்வது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இறுதியில் அவர் தன் பாதையில் இருக்கும் அனைத்து சுவர்களை உடைத்ததும் அவரை துரத்தி வந்த ரயில் மறைந்து போகும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதாவது நம்முடைய வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும் அதை உடைத்து எரிந்து செல்ல வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் இந்த வீடியோ வடிவமைக்கப்பட்டுள்ளது.
Eyes on the target and determination to break every barrier makes a champion! This International Day of Education, make a note to remember Lesson No 7 during tough times. #DhoniUnacademyFilm #LessonNo7 pic.twitter.com/dFJTC5s1vQ
— Unacademy (@unacademy) January 24, 2022
இந்நிலையில் இந்த வீடியோ தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “இது உங்களுடைய ஹெலிகாப்டர் ஷாட்டை போல் சிறப்பாக உள்ளது. இது உங்கள் கதை மட்டுமல்ல பல கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையையும் இது குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதை பார்க்கும் போது என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள் எனது நினைவிற்கு வருகிறது. இது ஒரு சிறப்பான வாழ்க்கை பாடம்” எனப் பதிவிட்டுள்ளார்.
Wow ! This is as good as the helicopter shot @msdhoni . This is your story and the story of every cricketer ever! Reminded me of the numerous lows that I went through to achieve the highs in my career! Brilliant life lesson @unacademy. #DhoniUnacademyFilm #LessonNo7 pic.twitter.com/esAVaejIEo
— Virender Sehwag (@virendersehwag) January 24, 2022
தோனியின் இந்த புதிய விளம்பர வீடியோவை பலரும் பார்த்து ரசித்து வருகின்றனர். மேலும் பலரும் இந்த வீடியோ தொடர்பாக தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: விராட்கோலி கேப்டனாக 50-60 வெற்றிகள் பெறுவதை, சிலரால் ஜீரணிக்க முடியவில்லை - ரவிசாஸ்திரி