மேலும் அறிய

6 ஆண்டுகளுக்குப் பிறகு 10-க்கும் கீழ் தரவரிசைக்கு போன கோலி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு 10வது இடத்திற்கும் கீழ் சரிந்திருக்கிறார் விராட் கோலி.

யானைக்கும் அடிசறுக்கும் என்பார்களே அப்படி தான் சறுக்கியிருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. இன்று கடந்த முறை வெளியான டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் பத்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருந்த விராட் கோலி, தற்போது வெளியானப் பட்டியலில் டாப் 10ல் இருந்தே வெளீயேற்றப்பட்டிருக்கிறார். கடந்த 2016ம் ஆண்டிற்குப் பிறகு கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் கழித்து 10க்கும் கீழேப் போயிருக்கிறார்.

9 இன்னிங்ஸில் 249 ரன்கள் மட்டுமே:

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 11 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 20 ரன்களும் எடுத்து மிகப்பெரிய அளவில் ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்துள்ளார். இந்த மோசமான பேட்டிங்கிற்குக் கிடைத்தப் பரிசு தான் தரவரிசைப் பட்டியலில் பின்னடைவு. 10வது இடத்தில் இருந்த விராட் கோலி  13வது இடத்திற்குத் தள்ளப்பட்டார். பட்டோடி கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 9 இன்னிங்ஸ்களில் விராட் கோலி எடுத்துள்ள ரன்கள் வெறும் 249 மட்டுமே. சராசரியாக 27.66 ரன்களை எடுத்துள்ளார். இந்த ஆண்டில் மட்டும் என்று பார்த்தால் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 220 ரன்கள் மட்டும் எடுத்துள்ளார். கடந்த 2019ல் இருந்து தற்போது வரை  அவர் எடுத்துள்ளது 872 ரன்கள் தான்.

6 ஆண்டுகளுக்குப் பிறகு 10-க்கும் கீழ் தரவரிசைக்கு போன கோலி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

2019ல் கடைசி சதம்:

போதாக்குறைக்கு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 50 ஓவர் தொடரில் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து 3வது ஆண்டாக ஒரு சதம் கூட அடிக்காமல் நிறைவு செய்யும் நிலையில் இருக்கிறார் கோலி. கடைசியாக வங்கதேச அணிக்கு எதிராக 2019ம் ஆண்டு நடைபெற்ற பகல் இரவு டெஸ்ட் போட்டியில் 194 பந்துகளில் 136 ரன்களை அடித்தார். அதன் பிறகு விளையாடிய 100க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பது ஒரு வீரராகவும், ஒரு அணியாகவும் மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

6 ஆண்டுகளுக்குப் பிறகு 10-க்கும் கீழ் தரவரிசைக்கு போன கோலி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

சிறந்த டெஸ்ட் கேப்டன்:

இந்த ஆண்டில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடர் தவிர்த்து மற்ற எல்லா போட்டிகளிலும் சொற்ப ரன்களிலேயே அவுட்டாகியிருக்கிறார். ஆனால் டெஸ்ட் அணியின் கேப்டனாக இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தியிருக்கிறார். இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக 2017, 2018, 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி நம்பர் ஒன் இடத்தில் இருக்க விராட் கோலியின் தலைமையே காரணம். இன்னும் குறிப்பிட்டு சொல்லப்போனால் 84 மாதங்கள் இந்திய அணியின் கேப்டனாக இருந்தார் விராட் கோலி. இந்த காலகட்டத்தில் முதல் 36 மாதங்களில் ஒரு தொடரில் கூட இந்திய அணி தோல்வி பெற வில்லை. 2018ம் ஆண்டில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக பெற்றதோல்வி தான் விராட் கோலி தலைமையிலான அணி பெற்ற முதல் தோல்வி. 2014 முதல் 2022 வரை 68 போட்டிகளில் 40 போட்டிகளில் வெற்றியைத் தேடித்தந்திருக்கிறார்.

6 ஆண்டுகளுக்குப் பிறகு 10-க்கும் கீழ் தரவரிசைக்கு போன கோலி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

அசைக்க முடியாத இடத்தில் கோலி:

பேட்டிங்கை எடுத்துக் கொண்டாலும் கூட சர்வதேச அளவில் சதங்களை விளாசிய ஆட்டக்காரர்களில் விராட் கோலி 70 சதங்களுடன் முன்னணியில் இருக்கிறார். இப்போது தூக்கி வைத்துக் கொண்டாடப்படும் ஜோ ரூட் 44 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். விராட் கோலிக்குத் தேவைப்படுவதெல்லாம் ஒரு நல்ல கம்பேக் மட்டுமே. ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடினாலும் அதைத் தொடரும் ஆற்றல் கோலிக்கு உண்டு. ஃபீல்டிங்கில் மிகவும் அக்ரசிவாக இருக்கிறார் கோலி. அதை கொஞ்சம் பேட்டிங்கிலும் காட்டலாம். யானைக்கு அடிசறுக்கும் தான். ஆனால், சறுக்கிய யானை மீண்டும் எழாது என்று எங்கும் சொல்லப்படவில்லை.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget