Kohli Quits Test Captaincy: “68 டெஸ்ட் போட்டிகளில் 40 வெற்றிகள்” - கோலிக்கு வாழ்த்து தெரிவித்து பிசிசிஐ ட்வீட்
விராட் கோலியின் பதவி விலகலை ஏற்றதை உறுதிப்படுத்தும் வகையில், பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகள் தெரிவித்து பதிவிட்டிருக்கிறது.
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடருக்கு எதிராக இந்திய அணி மோசமாக தோல்வியடைந்தது. இந்த தோல்வியினாலும், இந்திய அணி வீரர்களின் பேட்டிங் பார்ம் குறித்தும் முன்னாள் வீரர்கள் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இந்திய டெஸ்ட் கேப்டன் பதவியை விராட் கோலி ராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிவிப்பில், “7 ஆண்டுக்கால உழைப்பு இது. இந்திய கிரிக்கெட் அணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லவும், சரியான பாதையில் கொண்டு செல்லவும் ஒவ்வொரு நாளும் அயராத உழைத்திருக்கிறேன். நான் செய்த வேலையில் நேர்மையாக இருந்திருக்கிறேன். எல்லாமும் ஒரு நாள் முடிவுக்கு வரவேண்டும், டெஸ்ட் கேப்டன் பொறுப்புக்கும் ஒரு முடிவு வந்திருக்கிறது. அது இப்போதுதான்” என பதிவிட்டிருக்கிறார்.
இந்நிலையில், விராட் கோலியின் பதவி விலகலை ஏற்றதை உறுதிப்படுத்தும் வகையில், பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகள் தெரிவித்து பதிவிட்டிருக்கிறது. அதில், “பிசிசிஐ சார்பாக இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். அவரது சிறந்த தலைமை பண்பினால், இந்திய அணி பல உயரங்களை எட்டி இருக்கிறது. அவர் வழிநடத்திய 68 டெஸ்ட் போட்டிகளில், 40 போட்டிகளில் வெற்றியை ஈட்டி இந்திய கிரிக்கெட்டின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக திகழ்ந்திருக்கிறார்” என குறிப்பிட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரலையில் காண : Live | Palamedu Jallikattu 2022 Live | ஜல்லிக்கட்டு 2022 நேரலை | Pongal 2022 | Jallikattu Live
BCCI congratulates #TeamIndia captain @imVkohli for his admirable leadership qualities that took the Test team to unprecedented heights. He led India in 68 matches and has been the most successful captain with 40 wins. https://t.co/oRV3sgPQ2G
— BCCI (@BCCI) January 15, 2022
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்