Watch Video | மீண்டும் களமிறங்கத் தயாராகும் கிங் கோலி...! வைரலாகும் பிட்னஸ் வீடியோ...!
இந்திய கேப்டன் விராட்கோலியின் உடற்பயிற்சி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுமாகியவர் விராட் கோலி. விராட்கோலி சிறுவயது முதலே உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதில் மிகவும் கட்டுக்கோப்பாக அக்கறை காட்டி வருகிறார். 33 வயதான விராட்கோலி தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால், ரன்மெஷின் விராட்கோலி சிக்ஸ்பேக்குடன் கூடிய உடற்கட்டை கொண்டுள்ளார்.
"Ease is a greater threat to progress than hardship” - denzel Washington pic.twitter.com/QvYgfSSmO7
— Virat Kohli (@imVkohli) November 27, 2021
இந்த நிலையில், விராட்கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், உடற்பயிற்சி கூடத்தில் தீவிர பயிற்சியில் விராட்கோலி ஈடுபடுகிறார். மேலும், அந்த வீடியோவிற்கு கீழ் அமெரிக்காவின் பிரபல நடிகரான டென்ஷல் வாஷிங்டன் கூறிய பொன்மொழியையும் பதிவிட்டுள்ளார். அதாவது, “கஷ்டத்தை விட எளிமையே முன்னேற்றத்திற்கு பெரும் அச்சுறுத்தலாகும்- டென்ஷல் வாஷிங்டன்” என்று பதிவிட்டுள்ளார்.
அதாவது, எந்த ஒரு விஷயமும் கடினமாக உழைக்காமல் கிடைக்காது என்றும், கடின உழைப்பை அளிக்காமல் எளிதாக இருப்பதுதான் முன்னேற்றத்திற்கு கடும் அச்சுறுத்தல் என்றும் பதிவிட்டுள்ளார். விராட்கோலியின் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற டி20 தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் வென்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்து டெஸ்ட், ஐ.பி.எல்., உலககோப்பை டி20 என்று தொடர்ச்சியாக ஆடி வந்த கேப்டன் விராட்கோலிக்கு அந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியிலும் விராட்கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் நடைபெற உள்ள கடைசி டெஸ்ட் போட்டியில் விராட்கோலி மீண்டும் களமிறங்க உள்ளார். அவரது வருகையை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்திய அணியின் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக பொறுப்பு வகித்து வந்த விராட்கோலி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய அணியின் டி20 வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கேப்டன் பொறுப்பில் இருந்து அறிவித்தார். பின்னர், ஐ.பி.எல். போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். இதனால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இருப்பினும், விராட்கோலி ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளுக்கு மட்டும் கேப்டனாக பொறுப்பு வகிப்பதாக அறிவிக்கப்பட்டது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்