மேலும் அறிய

Virat Kohli: அயோத்தியில் சுற்றித்திரிந்த விராட் கோலியின் டூப்ளிகேட்.. செல்பி எடுக்க குவிந்த ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ!

அயோத்தியில் டூப்ளிகேட் விராட் கோலி, சுற்றிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தனிப்பட்ட காரணத்திற்காக விலக முடிவு செய்துள்ளார். அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு கோலி மற்றும் அவரது மனைவு அனுஷ்கா சர்மா அழைக்கப்பட்டனர். ஆனால், தனிப்பட்ட காரணங்களால் கோலி இந்த விழாவில் பங்கேற்க முடியவில்லை. 

அதே சமயம் அயோத்தியில் டூப்ளிகேட் விராட் கோலி, சுற்றிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இந்திய அணியின் ஜெர்சியில் டூப்ளிகேட் கோலி இருந்ததாகவும், மக்கள் அவரை சூழ்ந்திருப்பதையும் காணலாம். 

பெரும்பாலானோர் கையில் மொபைலை வைத்துக்கொண்டு செல்ஃபி எடுக்க முயல்கின்றனர். சிறிது நேரத்தில் கடுப்பான டூப்ளிகேட் கோலி, கோபமடைந்து அங்கிருந்து செல்ல முயற்சிக்கிறார். இருப்பினும், மக்கள் அவரை மீண்டும் சூழ்ந்துகொண்டு புகைப்படங்களை கிளிக் செய்ய தொடங்குகிறார்கள். வீடியோவின் முடிவில், டூப்ளிகெட் கோலி அங்கிருந்து ஓடுவதையும், ஆனால் ரசிகர்கள் விடாமல் பின்தொடர தொடங்கினர். 

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகிய விராட் கோலி: 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக நேற்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. வருகின்ற ஜனவரி 25ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட தொடருக்கு முன்னதாக இந்த அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டது. இதையடுத்து, விராட் கோலிக்கு பதிலாக மற்றொரு மாற்று வீரரை பிசிசிஐ விரைவில் அறிவிக்கும். 

 இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தனிப்பட்ட காரணங்களுக்காக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகுமாறு பிசிசிஐக்கு விராட் கோரிக்கை விடுத்துள்ளார்.

விராட் கோலி இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்களிடம் பேசியதாகவும், நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதே தனது முதன்மையான முன்னுரிமை என்றும் கூறினார். இருப்பினும், சில தனிப்பட்ட சூழ்நிலை காரணமாக முதல் இரண்டு போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியவில்லை. பிசிசிஐ தனது நட்சத்திர வீரரை முழுமையாக ஆதரிப்பதாகவும், சிறந்த பேட்ஸ்மேன் இல்லாவிட்டாலும் அணி மற்றும் வெற்றிபெறும் திறனை நம்புகிறோம். மீதமுள்ள வீரர்கள் டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்படுவார்கள் என்று வாரியம் நம்பிக்கை கொண்டுள்ளது. கோலியின் தனியுரிமையை அனைவரும் மதிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார். 

2024 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணிகள் 

IND vs ENG டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி (1வது மற்றும் 2வது டெஸ்ட்): ரோஹித் சர்மா (C), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், KL ராகுல் (WK), KS பாரத் (WK), துருவ் ஜூரல் (WK) , ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகேஷ் குமார், அவேஷ் கான்

IND vs ENG டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி : பென் ஸ்டோக்ஸ் (C), ரெஹான் அகமது, ஜேம்ஸ் ஆண்டர்சன், கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோ (WK), ஷோயப் பஷீர், ஹாரி புரூக், சாக் க்ராவ்லி, பென் டக்கெட், பென் ஃபோக்ஸ், டாம் ஹார்ட்லி, ஜாக் லீச் , ஒல்லி போப், ஒல்லி ராபின்சன், ஜோ ரூட், மார்க் வூட்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget