virat kholi: ட்ரோல் செய்யப்பட்ட விராட், நெஹ்ரா புகைப்படம்: விளக்கம் கொடுத்த அசாருதீன்...!
ரிஷி சுனக் பிரிட்டனின் பிரதமராக நியமிக்கப்பட்டதை அடுத்து, விராட் கோலி மற்றும் ஆஷிஷ் நெஹ்ராவின் புகைப்படம் குறித்து அசாருதீன் விளக்கம் அளிக்கும் வகையில் பதிவிட்ட ட்வீட் கடுமையாக ட்ரோல் செய்யப்படுகிறது.
கோலி மற்றும் நெஹ்ராவின் பழைய புகைப்படம் குறித்து அசாருதீனின் பதிவிட்ட ட்வீட் இணையத்தில் ட்ரோல் செய்யப்படுகிறது.
பிரிட்டனின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக ரிஷி சுனக் நியமிக்கப்பட்டதை அடுத்து, விராட் கோலி மற்றும் ஆஷிஷ் நெஹ்ராவின் புகைப்படம் குறித்து முகமது அசாருதீன் விளக்கம் அளிக்கும் வகையில் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் பதவியை, போரிஸ் ஜான்சன் கடந்த ஜூலையில் ராஜினாமா செய்தார். ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக இருப்பவரே பிரதமராக முடியும். இதையடுத்து நடந்த தேர்தலில், இந்திய வம்சாவளியான முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக்கை வென்று, முன்னாள் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் பிரதமரானார். ஆனால், அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தின. இதனால், 45 நாட்கள் பதவியில் இருந்த நிலையில், லிஸ் டிரஸ் சமீபத்தில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். கட்சியின் புதிய தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதாக ரிஷி சுனக் அறிவித்தார். அவரை எதிர்த்து போட்டியிடுவதாக அறிவித்த போரிஸ் ஜான்சன் பின் வாங்கினார். இதனால் போட்டியின்றி ரிஷி சுனக் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனால், அவர் பிரிட்டனின் பிரதமானார்.
The actual stars in the pic are @imVkohli with @ashishnehra1
— Mohammed Azharuddin (@azharflicks) October 25, 2022
Not UK’s new prime minister as being circulated on #WhatsApp pic.twitter.com/F00QKZhTg9
ட்விட்டரில் முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீன் பதிவிட்ட ட்வீட் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராக சுனக் நியமிக்கப்பட்டது சமூக ஊடகங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது. இணையத்தில் ரிஷி சுனக் மற்றும் விராட் கோலி இருப்பது போல் ஒரு புகைப்படம் நெட்டிசன்களால் பரப்பட்டு வைரலானது. தோற்றத்தில் ரிஷி சுனக், இந்திய க்ரிக்கெட் வீரர் நெஹ்ரா போல் இருப்பதால் பலரும் அவரை நெஹ்ரா உடன் ஒப்பிட்டு இணையத்தில் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ரிஷி சுனக் மற்றும் கோலி இருப்பது போல் ஒரு புகைப்படம் வைரலானது, 'இளம் கோலி வித் சுனக்' புகைப்படம் சமூக ஊடகங்களில் உடனடியாக பலரால் பகிரப்பட்டு வந்தது. அதற்கு விளக்கமளிக்கும் வகையில் முன்னாள் இந்திய க்ரிக்கெட் அணியின் கேப்டன் முகமது அசாருதீன் ட்வீட் ஒன்றை பதிவிட்டு புகைப்ப்டத்தில் இருப்பது ரிஷி சுனக் இல்லை என்றும், புகைப்படத்தில் இருப்பது விராட் கோலியும் நெஹ்ரா என பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. அவரது தலைமுறையின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான அசாருதீன், இந்திய அணிக்காக 99 டெஸ்ட் மற்றும் 334 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் (ODI) விளையாடியுள்ளார். முன்னாள் இந்திய மிடில் ஆர்டர் பேட்டர், தொடர்ந்து 3 உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவுக்கு கேப்டனாக இருந்தார். அசாருதீன் ஆட்டத்தின் மிக அதிகமாக 6215 ரன்கள் எடுத்தார். முன்னாள் இந்திய கேப்டன் இரண்டு முறை உலக சாம்பியனுக்காக 50 ஓவரில் 9378 ரன்கள் குவித்தார்.