MS Dhoni Viral Video: இசையமைப்பாளராக மாறிய தோனி - வைரலாகும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீடியோ..!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி கிடார் வாசிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி கிடார் வாசிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்,குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. 4 முறை சாம்பியனான சென்னை அணியின் வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான அணிகளின் ப்ரோமோ வீடியோக்களின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பொதுவாக ஐபிஎல் தொடரின் அணிகளின் வீடியோக்கள் ரசிகர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும். குறிப்பாக ஆரம்ப காலக்கட்டங்களில் வெளியான ஐபிஎல் விளம்பரங்கள் யாவும் ரசிகர்களால் மறக்க முடியாக ஒன்றாக உள்ளது. அந்த வகையில் இந்தாண்டு என்ன மாதிரியான விளம்பரங்கள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
Groovy Wednesday! 🥳#WhistlePodu #Yellove 🦁💛 @snj10000 pic.twitter.com/fLpSthiMrw
— Chennai Super Kings (@ChennaiIPL) March 15, 2023
இதனிடையே சென்னை அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி, ருதுராஜ் கெய்க்வாட், தீபக் சாஹர், ஷிவம் துபே ஆகியோர் இடம் பெற்ற ஷூட்டிங்கின் வீடியோ கிளிப்ஸ் வெளியாகியுள்ளது. இதில் தோனி கிட்டார் ஒன்றை வைத்துக் கொண்டு ஜாலியாக இசைத்தபடி நடித்துள்ளார். அவரது ஹேர்ஸ்டைல் மற்றும் தோற்றம் தோனி இன்னும் இளமையாகவே இருக்கிறார் என்பதை காட்டுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இதுதொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளது.
கடந்தாண்டு ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி படுமோசமாக விளையாடியது. 14 போட்டிகளில் அந்த அணி 10 போட்டிகளில் தோல்வியை புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தை பெற்றது. இந்த ஐபிஎல் தொடரில் குஜராத், லக்னோ அணிகள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இந்தாண்டு தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் இது என சொல்லப்படுவதால் அவரை மகிழ்ச்சியாக வழியனுப்பு வண்ணம் கோப்பையை சென்னை அணி கைப்பற்ற முயற்சிக்கும் என கூறப்படுகிறது.