USA Cricket Suspension: அமெரிக்க கிரிக்கெட் அணி இடை நீக்கம்! அதிரடி காட்டிய ஐசிசி! என்ன காரணம் தெரியுமா?
USA Cricket Suspension: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அமெரிக்க கிரிகெட் வாரியத்தை இடை நீக்கம் செய்திருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் இடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

USA Cricket Suspension: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அமெரிக்க கிரிகெட் வாரியத்தை இடை நீக்கம் செய்திருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் இடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க கிரிக்கெட் வாரியம்:
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் வரும் 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு அமெரிக்க அணி சர்வேசத அளவில் கிரிக்கெட் போட்டிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் அமெரிக்க கிரிக்கெட் வாரியமும் செயல்பட்டு வருகிறது. இச்சூழலில் தான் அமெரிக்க கிரிக்கெட் வாரியத்தை சர்வதேச கிர்க்கெட் கவுன்சில் இடை நீக்கம் செய்துள்ளது. குறிப்பாக ஐசிசியின் விதிகளை அமெரிக்க கிர்க்கெட் வாரியம் மீறியதாகவும், முறையான நிர்வாக அமைப்பை கட்டமைக்க தவறியதுமே இதற்கு காரணம் என்று ஐசிசி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கடமைகளை செய்ய தவறியது:
இது தொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு நிலையான மற்றும் செயல்படும் நிர்வாக அமைப்பை உருவாக்கத் தவறியது, ஐசிசி அமைப்பின்கீழ், ஓர் உறுப்பினராக தனது கடமைகளைத் தொடர்ச்சியாக மீறியது, அமெரிக்க ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் குழுவிடம் இருந்து, தேசிய நிர்வாக அமைப்பு என்ற அங்கீகாரத்தைப் பெறுவதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாதது, அமெரிக்காவிலும், உலக அளவிலும் கிரிக்கெட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டது .
2024ஆம் ஆண்டிலேயே, அமெரிக்க கிரிக்கெட் சங்கம் ஐசிசியால் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தது. முறையான மற்றும் சுதந்திரமான தேர்தல்களை நடத்தி, நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளுமாறு பலமுறை அறிவுறுத்தப்பட்டும், அதனைச் செயல்படுத்தத் தவறியதாலேயே இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், “இந்த இடைநீக்க நடவடிக்கையை துரதிர்ஷ்டவசமானது தான் ஆனால் அவசியமானது. ஐ.சி.சி-யின் முதன்மையான முன்னுரிமை, விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு இடைநீக்கம் காரணமாக பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதாகும் ”என்று ஐசிசி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கு எந்த தடையும் இல்லை அமெரிக்க அணியின் நிர்வாக மேலாண்மையை ஐசிசியே கவனுக்கும் என்பதும் தெளிபடுத்தப்பட்டுள்ளாது.



















