மேலும் அறிய

Watch Video: சிக்கிய ஸ்டெம்புகள்... சிதறிய பெயில்கள்.. அதிவேகத்தில் பந்தை வீசி தெறிக்கவிட்ட உம்ரான் மாலிக்!

இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் 150 கி.மீ வேகத்தில் பந்து வீசுவார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்று கைப்பற்றியது.,

முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து இமாலய ஸ்கோரை துரத்தும் பணியில் மொத்தமாக சரிந்த நியூசிலாந்து அணி 12.1 ஓவரில் 66 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த பெரிய வெற்றி மூலம் இந்திய அணி பல சாதனைகளை உடைத்துள்ளது. 

இந்திய அணியில் கேப்டன் ஹர்திக் பாண்டியா, வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தலா மூன்று விக்கெட்களும், உம்ரான் மாலிக் மற்றும் சிவம் மாவி தலா இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினார். அதிலும், அர்ஷ்தீப் தனது முதல் ஓவரின் முதல் மற்றும் கடைசி பந்தில் டெவான் கான்வே மற்றும் மார்க் சாப்மேன் ஆகியோரை வெளியேற்றி அசத்த, இன்னிங்ஸின் 9வது ஓவரில் நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் மற்றும் இஷான் சோதியை மாவி வெளியேற்றினார். 

இதற்கிடையில், இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் 150 கி.மீ வேகத்தில் பந்து வீசுவார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தற்போது, உலகளவில் அதிவேகமாக பந்து வீசும் பந்து வீச்சாளர்களின் பட்டியலிலும் உம்ரான் மாலிக் பெயர் உள்ளது. இந்தநிலையில், மைக்கெட் பிரேஸ்வெல் பேட் செய்தபோது 5வது ஓவரை வீசிய உம்ரான் மாலிக் அதிவேகமாக பந்தை வீசினார். இந்த பந்தானது போல்ட்டை வேகமாக தாக்கி, அதிலிருந்த பெயில்கள் விக்கெட் கீப்பர் இஷான் கிஷானின் தலைக்கு மேல் பறந்து 30 யார்டு வட்டத்தை தாண்டி விழுந்தது. எல்.இ.டி பல்புகள் உள்ள பெயில்கள் பறந்துகொண்டே வானில் சென்ற வீடியோ இணையத்தில் அதிவேகமாக வைரலாகி வருகிறது. 

போட்டி சுருக்கம்:

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. ஒருநாள் தொடரை முழுவதுமாக இந்திய அணி கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டியை நியூசிலாந்து அணி வென்ற நிலையில், 2வது டி20 போட்டியை இந்திய அணி வென்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. 

இதனிடையே டி20 தொடரை கைப்பற்றப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.

பட்டாசாய் வெடித்த இந்திய அணி:

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில், கடந்த சில டி20 போட்டிகளாக தொடர்ந்து சொதப்பி வரும் இஷான் கிஷான் இந்த முறையும் சொதப்பினார். 1 ரன்னில் அவர் விக்கெட்டை பறிகொடுக்க அடுத்ததாக ராகுல் திரிபாதி உள்ளே வந்தார். 

மறுபுறம் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சுப்மன் கில் நியூசிலாந்து பந்து வீச்சை விளாசி தள்ளினார். ஒரு கட்டத்தில் சுப்மன் கில் - ராகுல் திரிபாதி இருவரும் நியூசிலாந்து விழிபிதுங்கும் அளவுக்கு அதிரடி ஆட்டம் ஆடினர். ஸ்கோர் 87 ஆக உயர்ந்த போது 44 ரன்களில் ராகுல் திரிபாதி வெளியேறினார். ஆனாலும் சுப்மன் கில்லின் அதிரடி மட்டும் நிற்கவேயில்லை. 3 விக்கெட்டுக்கு களம் கண்ட சூர்யகுமார் யாதவ் தன் பங்கிற்கு 24 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

அசூர ஆட்டம் ஆடிய சுப்மன் கில் பந்துகளில் 12 பவுண்டரி, 7 சிக்ஸர்களுடன் சதமடித்தார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய அவர் ஆட்டமிழக்காமல் 126 ரன்கள் குவித்தார். அவருக்கு உறுதுணையாக ஆடிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 30  ரன்கள் எடுத்து அவுட்டானார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி தரப்பில் மைக்கேல் பிரேஸ்வெல், பிளைர் திக்னெர், சௌதி தலா, டேர்ல் மிட்செல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

சீட்டுக்கட்டாய் சரிந்த நியூசிலாந்து

இதனைத் தொடர்ந்து 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட நியூசிலாந்து ஆரம்பம் முதலே ஆட்டம் கண்டது. அந்த அணியின் ஃபின் ஆலன் 3 ரன்களிலும், டெவன் கான்வே 1 ரன்னிலும், மார்க் சேப்மேன் ரன் ஏதுவும் எடுக்காமலும், கிளென் பிலிப்ஸ் 2 ரன்களிலும், மிட்செல் பிரேஸ்வெல் 8 ரன்களிலும், மிட்செல் சாண்ட்னர் 13 ரன்களிலும், சௌதி, லோகி பெர்குசன் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட்டாயினர்.

மறுபுறம் ஒற்றை ஆளாக கௌரமான இலக்கை அடைய டெய்ரி மிட்செல் மட்டும் போராடினார். இறுதியாக நியூசிலாந்து அணி 12.1 ஓவர்களில் 66 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இறுதிவரை போராடிய மிட்செல் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஏற்கனவே ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
Embed widget