Team India Victory Parade: உலகக் கோப்பை வெற்றி பேரணி.. இடையே வந்த ஆம்புலன்ஸ்.. ரசிகர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்!
டி20 உலகக் கோப்பை வெற்றி பேரணியின் போது சாலையில் வந்த ஆம்புலன்ஸ்-க்கு ரசிகர்கள் வழி விட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி:
கடந்த ஜூன் 29 ஆம் தேதி ஐசிசி டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி நடைபெற்றது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இந்த இறுதிப் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் கடந்த 2007 ஆம் ஆண்டிற்கு பிறகு ஐசிசி டி20 உலகக் கோப்பையிம் சாம்பியன் பட்டத்தை வென்றது ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி.
இந்திய அணியின் இந்த வெற்றியை ஒட்டு மொத்த தேசமும் கொண்டாடியது. பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் இந்திய அணியை வாழ்த்தினார்கள். இதனிடையே இந்திய அணி வீரர்கள் இன்று (ஜூலை 4) டெல்லிக்கு வந்தனர். பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இச்சூழலில் மும்பை வான்கடே மைதானம் நோக்கி இந்திய கிரிக்கெட் வீரர்கள் திறந்த பஸ்ஸில் பேரணி சென்றனர். அப்போது ரசிகர்கள் கூட்டத்தால் வான்கடே நோக்கி செல்லும் சாலையில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டு உள்ளனர். மைதானத்தில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கூடியுள்ள சூழலில் தற்போது பேரணியிலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
ஆம்புலன்ஸ்-க்கு வழி விட்ட ரசிகர்கள்:
இந்நிலையில் தான் லட்சக்கணக்க ரசிகர்கள் கூடியுள்ள நிலையிலும் ஒரு உணர்வுப்பூர்வமான சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது இந்த கூட்டத்திற்கு மத்தியில் அந்த சாலையில் ஆம்புலன்ஸ் ஒன்று செல்கிறது. அங்கு கூடியிருந்த ரசிகர்கள் அந்த ஆம்புலன்ஸ்-க்கு வழி விடுகின்றனர்.
#WATCH | Mumbai: Cricket fans gathered at Marine Drive make way for an ambulance to pass through the crowd.
— ANI (@ANI) July 4, 2024
Team India - the #T20WorldCup2024 champions - will have a victory parade here shortly. pic.twitter.com/WvTN7z1J7z
இது தொடர்பான வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதற்கு நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அதில் கணேஷ் என்ற ரசிகர் ஒருவர், இது உண்மையாகவே மிகவும் அழகானது என்று கூறியுள்ளார். அதேபோல் அகமது என்ற மற்றொரு ரசிகர் “இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இந்த செயல் பாராட்டுதலுக்குரியது” என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க: Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
மேலும் படிக்க: Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்.. இந்திய தடகள வீரர்கள் அறிவிப்பு - 5 தமிழக வீரர்களுக்கு இடம்!