Asian Games 2023: ஆசிய விளையாட்டுகளின் அட்டவணை - கிரிக்கெட் உட்பட அனைத்து போட்டிகளின் விவரங்கள் இதோ!
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் பெரும்பாலான போட்டிகள் தொடக்க விழாவுடன் செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்குகிறது.
இந்தாண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023 சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியானது கடந்த ஆண்டே நடைபெற வேண்டியது, ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நடத்த முடியவில்லை. அதன் தொடர்ச்சியாக ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023 ஹாங்சோ நகரில் நடைபெறுகிறது. இந்த ஆசிய விளையாட்டுகளில் மொத்தம் 61 போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த ஆசிய விளையாட்டுப் போட்டி 16 நாட்கள் நடைபெறும் நிலையில் மொத்தம் 5 நகரங்களிலும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போட்டி எப்போது தொடக்கம்..?
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் பெரும்பாலான போட்டிகள் தொடக்க விழாவுடன் செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்குகிறது. இதில், கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து மற்றும் கடற்கரை கைப்பந்து போன்ற விளையாட்டுகளின் போட்டிகள் செப்டம்பர் 19 முதல் நடத்தப்படும். இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழா அக்டோபர் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் அட்டவணை 2023:
ஆசிய விளையாட்டு கால்பந்து அட்டவணையின்படி, இந்திய கால்பந்து அணி, செப்டம்பர் 19 ஆம் தேதி மாலை 5 மணிக்கு இந்திய கால்பந்து அணி தனது முதல் கால்பந்து போட்டியில் சீனாவை எதிர்கொள்கிறது. மியான்மர் மற்றும் வங்காளதேசம் அடங்கிய குரூப் ஏ பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளனர். தற்போது சீன அணி 80வது இடத்திலும், இந்தியர்கள் 101வது இடத்திலும் உள்ளனர். 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கால்பந்தானது பெரும்பாலும் U-23 அணியாகவே இருக்கும். மூன்று சீனியர் வீரர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
இந்திய கால்பந்து அணி
ஆண்கள்: குர்மீத் சிங், தீரஜ் சிங் மொய்ராங்தெம், சுமித் ரதி, நரேந்தர் கஹ்லோட், தீபக் டாங்ரி, அமர்ஜித் சிங் கியாம், சாமுவேல் ஜேம்ஸ், ராகுல் கே.பி., அப்துல் ரபீ அஞ்சுகண்டன், ஆயுஷ் தேவ் செத்ரி, பிரைஸ் மிராண்டா, அஸ்பர் நூரானி, ரஹீம் அலி, ரஹீம் அலி, , ரோஹித் தனு, குர்கிரத் சிங், அனிகேத் ஜாதவ்.
பெண்கள்: எலங்பாம் பாந்தோய் சானு, சௌம்யா நாராயணசாமி, ஸ்ரேயா ஹூடா, லோயிடோங்பாம் ஆஷாலதா தேவி (கேப்டன்), நங்கங்பாம் ஸ்வீட்டி தேவி, சஞ்சு யாதவ், ரிது ராணி, சொரோகைபம் ரஞ்சனா சானு, தலிமா சிப்பர், அஸ்தம் ஓரான், நௌரெம் ஸ்ஜுயாங்திங், அன் ப்ரியங்காங், அன் ப்ரியங்காங் பாஸ்ஃபோர், கிரேஸ் டாங்மேய், சௌமியா குகுலோத், மனிஷா கல்யாண், ரேணு ராணி, சந்தியா ரங்கநாதன், பியாரி சாக்ஸா, ஜோதி சௌஹான், பாலா தேவி
Team India schedule in Asian Games 2022. pic.twitter.com/KmR4ObCcAF
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 14, 2023
கைப்பந்து போட்டி:
இந்தியாவின் கைப்பந்து போட்டி செப்டம்பர் 20 அன்று தென் கொரியாவுடன் மாலை 4.30 மணிக்கு இந்திய நேரப்படி தொடங்குகிறது. கடைசியாக 1986 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய கைப்பந்து அணி பதக்கம் வென்றது. அதில், இந்திய அணி மூன்றாவது இடத்தைப் பிடித்தது. 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் அணி மட்டுமே இடம் பிடித்துள்ளது.
கைப்பந்து 19-26 செப்டம்பர் (ஆண்கள்), 30 செப்டம்பர்-7 அக்டோபர் (பெண்கள்)
அணி விவரம்: அமித், வினித் குமார், ஷமீமுதின் அம்மரம்பத், முத்துசாமி அப்பாவு, ஹரி பிரசாத், மனோஜ் மஞ்சுநாத், ரோஹித் குமார், மோகன் உக்கிரபாண்டியன், அஷ்வல் ராய், சந்தோஷ் அந்தோணி ராஜ், குரு பிரசாந்த் சுப்ரமணியன், எரின் வர்கீஸ்
செப்டம்பர் 21ம் தேதி இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு மோதுகிறது. ஆனால், எதிரணி இன்னும் யார் என்று முடிவாகவில்லை.
இந்திய கிரிக்கெட் அணி:
ஆண்கள் : ருதுராஜ் கெய்க்வாட்(கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், சிவம் மவி, சிவம் துபே, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்)
பெண்கள் : ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), அமன்ஜோத் கவுர், தேவிகா வைத்யா, பூஜா வஸ்த்ரகர், டைட்டாஸ் சாது, ராஜேஸ்வரி கயக்வாட், கன்னிஜா மணி, , உமா செத்ரி (விக்கெட் கீப்பர்), அனுஷா பாரெட்டி