Team India New Captain: கோலிக்குப் பிறகு இவரு தான் சரி.. யுவராஜ் சிங் கைகாட்டிய இளம் வீரர்!!
கோலிக்கு பிறகு யார் இந்திய டெஸ்ட் அணியை வழி நடத்தவேண்டும் என்று முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதைத் தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்தார். இந்திய கிரிக்கெட் அணி அடுத்து இலங்கை அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதனால் இந்திய டெஸ்ட் அணிக்கு அடுத்த கேப்டன் யார் என்பதில் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது?
இந்நிலையில் இந்திய அணி அடுத்த டெஸ்ட் கேப்டனாக யார் நியமிக்கப்பட வேண்டும் என்று பல முன்னாள் வீரர்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அடுத்து ரிஷப் பண்ட் தான் இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக வர வேண்டும் என்று கூறியுள்ளதாக ட்வீட் செய்திருந்தார். அந்த ட்வீட்டிற்கு யுவராஜ் சிங் ஒரு பதில் ட்வீட்டை செய்துள்ளார். அதில், “நிச்சயமாக அவர் தான் வரவேண்டும். ஏனென்றால், ஸ்டெம்பிற்கு பின்னால் நின்று கொண்டு ஆட்டத்தை அவர் நன்றாக கணித்து வருகிறார்” எனப் பதிவிட்டுள்ளார்.
Absolutely! Reads the game well behind the stumps
— Yuvraj Singh (@YUVSTRONG12) January 15, 2022
இதேபோல் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர், “என்னை பொறுத்தவரை இந்திய அணியின் அடுத்த கேப்டனாக ரிஷப் பண்ட் தான் வரவேண்டும். அணியின் கேப்டன் பொறுப்பு அவருக்கு பேட்டிங்கில் கூடுதல் பலத்தை தரும். அவருக்கு அந்த நெருக்கடி நிலை பேட்டிங்கில் அதிக ரன்கள் அடிக்க உதவும். ஏன்னென்றால், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பு ஏற்றவுடன் நன்றாக பேட்டிங் செய்ய தொடங்கினார். அதேபோன்று ரிஷப் பண்டும் சரியாக விளையாட தொடங்குவார்” எனக் கூறியுள்ளார்.
இதற்கிடையே இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கு பின்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நேரலையில் காண இங்கே க்ளிக் செய்யவும்
மேலும் படிக்க: அவரா? இவரா? பரபரக்கும் இந்திய அணி! ரோகித் ஒகே தான்..! ஆனா? பிசிசிஐயின் புதிய திட்டம் !