மேலும் அறிய

Tamil Thalaivas: வெற்றிகளை குவிக்கும் நோக்கில் தமிழ் தலைவாஸ்; அடுத்த போட்டிகள் எப்போது? யாருடன்?

Tamil Thalaivas: தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 9 போட்டிகளில் தோல்வியைத் தழுவிய நிலையில், 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

ப்ரோ கபடி லீக் தற்போது மிகவும் பரபரப்பான கட்டத்தினை எட்டியுள்ளது. ப்ரோ கபடி லீக் தொடங்கி முதல் சில வாரங்களில் புள்ளிகள் அட்டவணையில் பெரிதாக மாற்றங்களே நிகழவில்லை. ஆனால் கடந்த சில வாரங்களாக புள்ளிப்பட்டியலில் அதளபாதாளத்தில் இருந்த அணிகள் மெல்ல மெல்ல முன்னேறி வருகின்றன. குறிப்பாக தமிழ் தலைவாஸ் அணி மொத்தம் உள்ள 12 அணிகள் அடங்கிய புள்ளிப்பட்டியலில் 11வது இடத்தில் நீண்ட காலமாக இருந்து வந்தது. இந்நிலையில் தமிழ் தலைவாஸ் அணி கடந்த சில போட்டிகளில் பெற்றுள்ள வெற்றியினால் புள்ளிப்பட்டியலில் 11வது இடத்தில் இருந்து 10வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 9 போட்டிகளில் தோல்வியைத் தழுவியது. அதே நேரத்தில் 4 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் 25 புள்ளிகளுடன் இருப்பதுடன் எதிர்மறை புள்ளிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. அதாவது மைனஸ் 14ஆக குறைந்துள்ளது. இது தமிழ் தலைவாஸ் அணிக்கு சாதகமாக மாறும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் தலைவாஸ் அணிக்கு இன்னும் 9 போட்டிகள் மீதமுள்ளன. இதில் தமிழ் தலைவாஸ் அணி தனது அடுத்த போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணியை வரும் 21ஆம் தேதி எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டி ஹைதராபாத்தில் உள்ள கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.  மீதமுள்ள 9 போட்டிகளில் தமிழ் தலைவாஸ் அணி தனது வெற்றியை உறுதி செய்தால் கட்டாயம் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். தமிழ் தலைவாஸ் அணி வரும் காலங்களில் உள்ள போட்டிகளில் சிறப்பாக விளையாடி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்துக்கொண்டு உள்ளனர். 

 

தமிழ் தலைவாஸ் அணிக்கு அடுத்து உள்ள போட்டிகளின் விபரம் 

 

  • ஜனவரி 21: பெங்களூரு புல்ஸ் vs தமிழ் தலைவாஸ் - கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கம், ஹைதராபாத்.

  • ஜனவரி 24: தெலுங்கு டைட்டன்ஸ் vs தமிழ் தலைவாஸ் – கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கம், ஹைதராபாத்.

  • ஜனவரி 28: தமிழ் தலைவாஸ் vs யு மும்பா - பாட்லிபுத்ரா உள்விளையாட்டு அரங்கம், பாட்னா.

  • ஜனவரி 31: ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் vs தமிழ் தலைவாஸ் - பாட்லிபுத்ரா உள்விளையாட்டு அரங்கம், பாட்னா.

  • பிப்ரவரி 4: குஜராத் ஜெயண்ட்ஸ் vs தமிழ் தலைவாஸ் – தியாகராஜ் உள்விளையாட்டு அரங்கம், டெல்லி.

  • பிப்ரவரி 6: தமிழ் தலைவாஸ் vs  உ.பி யோதாஸ் – தியாகராஜ் உள்விளையாட்டு அரங்கம், டெல்லி.

  • பிப்ரவரி 11: தமிழ் தலைவாஸ் vs புனேரி பல்டன் - நேதாஜி உள்விளையாட்டு அரங்கம், கொல்கத்தா.

  • பிப்ரவரி 14: தபாங் டெல்லி  vs தமிழ் தலைவாஸ் - நேதாஜி உள்விளையாட்டு அரங்கம், கொல்கத்தா.

  • பிப்ரவரி 18: தமிழ் தலைவாஸ் vs பெங்கால் வாரியர்ஸ் – தவ் தேவிலால் உள்விளையாட்டு அரங்கம், பஞ்ச்குலா.

தலைப்பு செய்திகள்

Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Ather Konarc: ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
Embed widget