T20 World Cup: சிறப்பான ஃபார்மில் இருக்கும் பாகிஸ்தான்...டி20 உலகக் கோப்பையை வெல்ல 3 காரணங்கள்..!
T20 World Cup: பாகிஸ்தான் அணி தனது முதல் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. உலகக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பாகிஸ்தான் உள்ளது.
T20 Worldcup: டி20 உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான், அடுத்த ஆட்டத்தில் நியூசிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மூன்றாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானையும் தோற்கடித்தது. பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் அந்த அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஸ்காட்லாந்து மற்றும் நமீபியாவை வீழ்த்துவது பாகிஸ்தானுக்கு கடினமாக இருக்காது. இதன்மூலம், பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறிவிடும். தொடக்கத்தில் இருந்தே அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதனால், கோப்பைக்கான வலுவான அணியாக அவர்கள் இருக்கிறார்கள். இந்த தொடரில் பாகிஸ்தான் ஏன் பலமுடன் இருப்பதற்கான மூன்று காரணங்களைத் தெரிந்து கொள்வோம்.
1. இந்தியாவை தோற்கடித்த பிறகு அந்த அணி அழுத்தத்திலிருந்து விடுபட்டுள்ளது:
கடந்த காலங்களில், இந்திய அணிக்கு எதிராக விளையாடிய ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்துள்ளது. இருப்பினும், முதல் போட்டியிலேயே இந்தியாவை தோற்கடித்த பிறகு அவர்கள் அழுத்தத்திலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டனர். இந்த அற்புதமான வெற்றிக்குப் பிறகு, அவர்களின் மன உறுதி எல்லா நேரத்திலும் உயர்ந்தே இருக்கிறது. அணி இப்போது அழுத்தம் இல்லாமல் விளையாடுகிறது மற்றும் ரசிகர்களிடமிருந்து பெரும் ஆதரவையும் பெற்று வருகிறது.
2. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விளையாடிய வலுவான அனுபவம்:
பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கும் மற்றொரு விஷயம். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விளையாடிய வலுவான அனுபவம் அவர்களுக்கு இருக்கிறது. சில பாதுகாப்பு காரணங்களால், பல வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தானுக்குச் செல்ல தயங்குகின்றன. இதன் விளைவாக பாகிஸ்தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பல போட்டிகளில் விளையாடி வருகிறது. இது அந்த அணி இங்கு அதிக அனுபவத்தைப் பெற உதவியது. அவர்கள் ஆடுகளத்தை நன்கு புரிந்துகொள்கிறார்கள். இங்கு பல பெரிய அணிகளுக்கு எதிராக பாகிஸ்தான் பல தொடர்களை வென்றுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மைதானங்களில் விளையாடுவது தனது அணிக்கு சொந்த மைதானத்தில் விளையாடுவது போன்றது என்று கேப்டன் பாபர் அசாம் குறிப்பிட்டுள்ளார்.
3. பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் இருவரும் ஃபார்மில் உள்ளனர்:
தற்போது பாகிஸ்தான் அணியின் சிறந்த அம்சமாக பார்க்கப்படுவது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் அவர்களின் திறமை ஆகும். கேப்டன் பாபர் ஆசாமும் அதிரடியாக விளையாடி வருகிறார். அவருடன் இன்னிங்ஸை தொடங்கிய ரிஸ்வானும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கடந்த போட்டியிலும் ஆசிப் அலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பந்துவீச்சைப் பொறுத்தவரை, இந்த போட்டியில் மற்ற அணிகளை விட பாகிஸ்தான் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஷஹீன் அப்ரிடியின் ஸ்விங் பந்துவீச்சு போட்டியில் பல நல்ல பேட்ஸ்மேன்களை திக்குமுக்காட வைத்தது. நியூசிலாந்துக்கு எதிராக ஹரிஸ் ரவூப் அபாரமாக பந்துவீசினார். இது தவிர, அணியில் பல சிறந்த ஸ்பின்னர்களும் உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்