T20 WC Warm Up: ஐ.பி.எல். முடிஞ்சுபோச்சுனு கவலையா? தொடங்கியது டி20 உலகக்கோப்பை ஃபீவர்!
T20 World Cup 2024 Warm Up: டி20 உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் இன்று முதல் நடைபெறுகின்றது.
இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இருந்த பேச்சு ஒன்றைப்பற்றியதாகத்தான் இருந்தது. அது, இந்தியாவில் நடைபெற்ற 17வது ஐபிஎல் சீசன் பற்றியதுதான். இதன் இறுதிப் போட்டியில் பலமான கொல்கத்தா அணி தனது மூன்றாவது கோப்பையை வென்றது. இந்நிலையில், கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை அப்படியே ஐசிசி நடத்தும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் மீது மாறியுள்ளது.
டி20 உலகக்கோப்பை:
ஜூன் 2ஆம் தேதி முதல் ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெறும் இந்த டி20 உலகக் கோப்பையை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்தவுள்ளது. மொத்தம் 20 நாடுகள் களமிறங்கியுள்ள இந்த டி20உலகக் கோப்பைப் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னர் அனைத்து நாடுகளும் பயிற்சி ஆட்டங்களில் விளையாடவுள்ளது.
இந்த பயிற்சி ஆட்டங்கள் இன்று முதல் அதாவது, மே மாதம் 27ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. மொத்தம் 16 பயிற்சி ஆட்டங்கள் நடைபெறவுள்ளது. இந்த பயிற்சி ஆட்டங்களின் அட்டவணைப்படி, இந்திய அணி தனது பயிற்சி ஆட்டத்தில் ஜூன் 1ஆம் தேதி வங்கதேச அணியை எதிர்கொள்ளவுள்ளது.
T20 உலகக் கோப்பை 2024 பயிற்சி ஆட்டங்களின் அட்டவணை
மே 27, திங்கள்: கனடா vs நேபாளம் - டல்லாஸ் - இரவு 9 மணி
மே 28, செவ்வாய்: ஓமன் vs பப்புவா நியூ கினியா - தரௌபா - நள்ளிரவு 12:30 மணி
மே 28, செவ்வாய்: நமீபியா vs உகான்டா - தாரூபா - காலை 4:30 மணி
மே 28, செவ்வாய்: இலங்கை vs நெதர்லாந்து - புளோரிடா - இரவு 8 மணி
மே 28, செவ்வாய்: பங்களாதேஷ் vs அமெரிக்கா - டல்லாஸ் - இரவு 9 மணி
மே 29, புதன்: ஆஸ்திரேலியா vs நமீபியா - போர்ட் ஆஃப் ஸ்பெயின் - காலை 4:30
மே 29, புதன்: ஆப்கானிஸ்தான் vs ஓமன் - போர்ட் ஆஃப் ஸ்பெயின் - இரவு 10:30
மே 30, வியாழன்: ஸ்காட்லாந்து vs உகாண்டா - தாரூபா - இரவு 8 மணி
மே 30, வியாழன்: நேபாளம் vs அமெரிக்கா - டல்லாஸ் - இரவு 9 மணி
மே 31, வெள்ளி: நமீபியா vs பப்புவா நியூ கினியா - தாரூபா - காலை 12:30 மணி
மே 31, வெள்ளி: நெதர்லாந்து vs கனடா - டல்லாஸ் - நள்ளிரவு 1:30 மணி
மே 31, வெள்ளி: ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ் - போர்ட் ஆஃப் ஸ்பெயின் - காலை 4:30 மணி
மே 31, வெள்ளி: அயர்லாந்து vs இலங்கை - புளோரிடா - இரவு 8 மணி
மே 31, வெள்ளி: ஸ்காட்லாந்து vs ஆப்கானிஸ்தான் - போர்ட் ஆஃப் ஸ்பெயின் - இரவு 8 மணி
ஜூன் 1, சனிக்கிழமை: இந்தியா vs பங்களாதேஷ் - நியூயார்க் - இரவு 8 மணி
இந்தியாவில் இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளங்களில் நேரலையாகக் காணலாம்.