(Source: ECI/ABP News/ABP Majha)
Watch Video: அப்புறம் என்ன அதானே... இந்த ஆண்டும் ‛வாத்தி கம்மிங்’ ஆட்டம் போட்ட தமிழ்நாடு அணி!
கடந்த ஆண்டு, விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் வரும் ‘வாத்தி கம்மிங்” பாடலுக்கு நடனமாடி கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியதை போல, இந்த ஆண்டும் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆடியுள்ளது தமிழ்நாடு அணி
சையத் முஷ்தாக் அலி டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடந்து முடிந்திருக்கிறது. தமிழ்நாடும் கர்நாடகாவும் மோதிய இந்த போட்டியில் தமிழ்நாடு கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. தமிழக வீரரான ஷாரூக்கான் அட்டகாசமாக கடைசி பந்தில் சிக்சர் அடித்து போட்டியை முடித்து வைத்தார்.
2006-2007, 2020, 2021 என மூன்று முறை தமிழ்நாடு அணி கோப்பையை கைப்பற்றி அசத்தி இருக்கிறது. கடந்த ஆண்டு வெற்றி பெற்றதன் மூலம் இரண்டாவது முறையாக தொடர்ந்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது தமிழ்நாடு அணி. முதல் இரண்டு கோப்பைகளையும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான அணி வென்றதை அடுத்து, இந்த முறை விஜய் சங்கர் தமையிலான தமிழ்நாடு கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு கோப்பையை வென்றபோது விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் வரும் ‘வாத்தி கம்மிங்” பாடலுக்கு நடனமாடி கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியதை போல, இந்த ஆண்டும் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆடியுள்ளது.
இந்த ஆண்டின் கொண்டாட்ட வீடியோ:
Great to see TN boys continuing the tradition of celebrating #SyedMushtaqAli title with a #VaathiComing dance with the captain leading from the front. For the 2020 season title, it was DK. This time, it's Vijay Shankar. #Master pic.twitter.com/YRudWjyQS8
— Srini Mama (@SriniMaama16) November 22, 2021
கடந்த ஆண்டு கொண்டாட்ட வீடியோ:
VAATHI COMING, OTHTHEY!! BAAIS VERA MAAARI CELEBRATION AFTER THE #SMA2021 WIN! 😂😂🔥🔥 pic.twitter.com/zWemnK2CHU
— Srini Mama (@SriniMaama16) January 31, 2021
கடைசி பந்தில் சிக்ஸ்... சையத் முஷ்டக் அலி கோப்பையை கைபற்றிய தமிழ்நாடு அணி அசத்தல்
— ABP Nadu (@abpnadu) November 22, 2021
video courtesy-BCCI https://t.co/wupaoCQKa2 | #SyedMushtaqAliT20 | #SyedMushtaqAliTrophy2021 | #ShahrukhKhan | @shahrukh_35 | #TamilNadu pic.twitter.com/ry0nAvx5OI
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்