Steve Smith: பாண்டிங், பார்டர்லா பின்னாடி போ! ஆசியாவிலே ஸ்மித்-தான் கிங் - அப்படி என்ன சாதனை?
Steve Smith: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 36-வது சதம் அடித்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் புதிய சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் ஸ்டார் கிரிக்கெட் வீரர் ஸ்மித் டெஸ்ட் போட்டிகளில் 36-வது சதம் அடித்ததன் மூலம் புதிய சாதனை படைத்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்து அசத்தினார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு 36-வது சதம். ஸ்டீவ் ஸ்மித் 191 பந்துகளில் சதம் அடித்தார். ஆட்டநேர முடிவில் 120 ரன்னுடன் களத்தில் இருக்கிறார். இதன் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக அவருக்கு இது 17-வது சதம். ஸ்மித் கடைசி ஐந்து போட்டிகளில் 4 சதம் அடித்துள்ளார். ஆசியாவில் மட்டுமே இது 7ஆவது சதம்.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட்டில் உணவு இடைவேளைக்கு பிறகு ஸ்மித் ஆஸ். முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்தார். ஆசிய பிராந்தியத்தில் அதிக டெஸ்ட் ரன் எடுத்த ஆஸ்திரேலிய வீரர் பட்டியலில் பாண்டிங்கை முந்தி முதலிடத்தை பிடித்தார்.
ரிக்கி பாண்டிங்க் 48 இன்னிங்ஸில் 1,889 ரன் 41.97 சராசரி உடன் முதலிடத்தில் இருந்தார். இவரை முந்தி ஸ்மித், 42 இன்னிங்ஸில் 1983 ரன் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.
ஆசிய பிராந்தியத்தில் அதிக சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர்கள்:
- ஸ்டீவ் ஸ்மித் - 43 இன்னிங்க்ஸ்* - 7 சதம்
- ஆலன் பார்டர் - 39 இன்னிங்க்ஸ் - 7 சதம்
- ரிக்கி பாண்டிங் - 48 இன்னிங்ஸ் - 5 சதம்
அதிக சதங்கள் - இலங்கை
- ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா)- 12 இன்னிங்ஸ் / 4 சதம்
- ப்ரையன் லாரா (வெஸ்ட் இண்டீஸ்) - 7 இன்னிங்க்ஸ் / 3 சதம்
- ஜோ ரூட் (இங்கிலாந்து) - 10 இன்னிங்ஸ் / 3 சதம்
கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் ஸ்வீட் ஸ்மித் பெயர் அதிகம் பேசப்படும் ஒன்றாக இருக்கும். பேட்டிங், ஃபீல்டிங் என.. அவரின் அதிரடி ஆட்டங்கள் எப்போதும் ரசிகர்களுக்கு நினைவில் இருக்கும்.இலங்கைக்கு எதிரான போட்டியில் சதம் அடித்ததுடன் கேட்ச் பிடித்ததிலும் புதிய ரெக்காட் எடுத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக கேட்ச் எடுத்த ஆஸ்திரேலிய வீரர்கள்:
- ஸ்டீவ் ஸ்மித் - 196
- ரிக்கி பாண்டிங் - 196
- மார்க் வாக் - 181
- மார்க் டெய்லர் - 157
- அலன் பார்டர் - 156
- மைக்கேல் க்ளாக் - 134
- மேத்யூ ஹைடேன் - 131
- ஷேன் வார்னே- 125
- க்ரெக் சாப்பல் - 122
- ஸ்டீவ் வாக் - 112
ஸ்டீவ் ஸ்மித் கிரிக்கெட் ரெக்காட்:
- டெஸ்ட் கிரிக்கெட் 115 போட்டிங்கள் - 10,140 ரன் - 35 சதங்கள் / 41 அரை சதங்கள்
- ஒருநாள் கிரிக்கெட் - 165 போட்டிகள் - 5662 ரன்ஸ் - 12 சதங்கள் / 34 அரை சதம்
- டி-20 கிரிக்கெட் - 67 போட்டிகள் - 1094 ரன்ஸ் - 5 அரை சதங்கள்

