மேலும் அறிய

Asia Cup : கடைசி ஓவரில் திரில் வெற்றி..! சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய இலங்கை..! தொடரை விட்டு வெளியேறிய வங்கதேசம்..!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேத்தை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய நிலையில் நேற்று குரூப் பி பிரிவில் வங்காளதேசமும், இலங்கையும் நேற்று மோதின.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த வங்காளதேச அணி மெஹிதிஹாசன், ஆபிப் ஹொசைன், மொசடெக் ஹொசைன் அதிரடியால் 184 ரன்களை இலங்கைக்கு இலக்காக நிர்ணயித்தது. இலக்கை நோக்கிய ஆடிய இலங்கை அணிக்கு தொடக்க வீரர் பதும் நிசங்கா 20 ரன்களிலும், அசலங்கா 1 ரன்னிலும், குணதிலகா 11 ரன்னிலும், அதிரடி வீரர் பனுகா ராஜபக்சே 2 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.

Asia Cup : கடைசி ஓவரில் திரில் வெற்றி..! சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய இலங்கை..! தொடரை விட்டு வெளியேறிய வங்கதேசம்..!

அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தாலும், தொடக்க வீரர் குசல் மெண்டிஸ் தொடர்ந்து அதிரடியாக ஆடினார். அவருக்கு கேப்டன் சனகா நல்ல ஒத்துழைப்பு அளித்தார். 77 ரன்களில் சேர்ந்த இந்த ஜோடி 131 ரன்களில்தான் பிரிந்தது. 14.3 ஓவர்களில் இலங்கை அணி 131 ரன்களை எட்டியபோது அதிரடியாக ஆடிய குசல் மெண்டிஸ் முஸ்தபிஷிர் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 37 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 60 ரன்களில் அவுட்டானார்.

அவர் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய ஹசரங்கா 2 ரன்களில் அவுட்டானார். ஆனாலும், கேப்டன் தசுன் சனாகா தனி ஆளாக மறுமுனையில் போராடினார். இலங்கை அணிக்கு நம்பிக்கை அளித்த சனாகா அணியின் ஸ்கோர் 158 ரன்களை எட்டியபோது மெஹிதி ஹாசன் பந்தில் அவுட்டானார். அவர் 33 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் கருணரத்னே அதிரடி காட்டினார். ஆனாலும், அவர் 19வது ஓவரின் 5வது பந்தில் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால், கடைசி ஓவரில் இலங்கை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்டது.

Asia Cup : கடைசி ஓவரில் திரில் வெற்றி..! சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய இலங்கை..! தொடரை விட்டு வெளியேறிய வங்கதேசம்..!

முஸ்தபிஷிர் ரஹ்மானுக்கு ஏற்கனவே நான்கு ஓவர்கள் முடிந்துவிட்டதால், அனுபவமில்லாத மெஹிதி ஹாசன் கடைசி ஓவரை வீசினார். அவர் வீசிய முதல் இரண்டு பந்துகளிலே டெயிலெண்டர் அசிதா பெர்னாண்டோ அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசினார். இதனால், இலங்கை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இலங்கை அணி சூப்பர 4 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

இலங்கை அணியின் பெர்னாண்டோ 3 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 10 ரன்கள் எடுத்து இலங்கை அணியை அபாரமாக வெற்றி பெற வைத்தார். குரூப் பி பிரிவில் ஏற்கனவே ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியிருந்தது. இரண்டாவது அணியாக இலங்கை அணியும் தற்போது முன்னேறியுள்ளதால் வங்காளதேச அணி தொடரை விட்டு வெளியேறுகிறது. குரூப் ஏ பிரிவில் இந்திய அணி பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளை வீழ்த்தி ஏற்கனவே சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!

காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?

ஹத்ராஸ் சென்ற ராகுல்காந்திக்கு ஏன் கள்ளக்குறிச்சி வரவில்லை? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி

Breaking News LIVE, July 5: தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹூட்டை கடந்த வெயில்

ABP Premium

வீடியோ

Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
ஹத்ராஸ் சென்ற ராகுல்காந்திக்கு ஏன் கள்ளக்குறிச்சி வரவில்லை? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி
ஹத்ராஸ் சென்ற ராகுல்காந்திக்கு ஏன் கள்ளக்குறிச்சி வரவில்லை? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி
Breaking News LIVE, July 5: தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹூட்டை கடந்த வெயில்
Breaking News LIVE, July 5: தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹூட்டை கடந்த வெயில்
Vikravandi Bye- Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; என்னென்ன தேர்தல் விதிமுறைகள் அமல்?

Sudha Kongara: சூர்யாவின் புறநானூறு படத்தின் கதை என்ன? மனம் திறந்த இயக்குனர் சுதா கொங்கரா!

Bajaj Freedom CNG Bike: உலகின் முதல் CNG பைக்கை அறிமுகப்படுத்திய அமைச்சர் கட்கரி - சிறப்பம்சங்கள், விலை?

Annamalai vs EPS: “ஈரோடு இடைத் தேர்தல் சீக்ரெட்” போட்டுடைத்த அண்ணாமலை – அதிர்ச்சியில் ஈபிஎஸ்..!

Embed widget