Viral video: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டியில் எண்ட்ரி: ஆட்டம் போடும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி
Viral video; மகளிருக்கான ஆசிய கோப்பை அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ’ரீல்ஸ்’ செய்து இலங்கை அணி கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
![Viral video: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டியில் எண்ட்ரி: ஆட்டம் போடும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி Sri Lanka Cricket Team's Perfectly Synchronized Dance After Beating Pakistan Goes Viral Viral video: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டியில் எண்ட்ரி: ஆட்டம் போடும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/14/640aad390ec31e4695c13a9923f7d10e1665731040281224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Viral video; மகளிருக்கான ஆசிய கோப்பை அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ’ரீல்ஸ்’ செய்து இலங்கை அணி கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் பங்களாதேஷில் நடந்து வருகிறது. மொத்தம் ஏழு அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறின. நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியும் மோதிக் கொண்டன. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்தது. அதன் பின்னர் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்தது. இதனால் இலங்கை அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது.
இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் இலங்கை அணி வீராங்கனைகள் மைதானத்தில் நடனமாடி ‘ரீல்ஸ்’ செய்து வெற்றியைக் கொண்டாடினர். இந்த வீடியோவை இலங்கை அணி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. தற்போது இது மிகவும் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
ஏற்கனவே நான்கு முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றும் கோப்பையை கைப்பற்ற முடியாத இலங்கை அணி இந்த முறை கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இந்த தொடர் முழுவதும் விளையாடி வருகிறது.
நாளை மதியம் 1 மணிக்கு தொடங்கும் இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணியும் இலங்கை மகளிர் அணியும் மோதிக் கொள்கின்றன. ஏற்கனவே இரு அணிகளும் நான்கு முறை இறுதிப் போட்டியில் மோதியுள்ளன. இதில் அனைத்து முறையும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் இதுவரை நேரடியாக மட்டும் இரு அணிகள் 21 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் இந்திய அணி 16 முறையும் இலங்கை 4 போட்டிகளில் இரு அணிகளும் 2008-ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் மோதிக்கொண்டன. அதில் இலங்கை அணி 177 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதேபோல், இந்த சீசனில் நடைபெற்ற லீக் போட்டியிலும் இந்திய அணியிடம் 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.
இதுவரை உள்ள ரெக்கார்டுகளைப் பார்க்கும் போதும் இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக உள்ளது. ஆனாலும், டி20 போட்டியினைப் பொறுத்தவரை ஒரு பவுலர் அல்லது ஒரு ஹிட்டர் போட்டியின் தன்மையை ஒரு ஓவரில் மாற்றிவிடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் இறுதிப் போட்டியில் மிகவும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த போட்டியை இந்திய அணி வென்றால் ஏழாவது முறையாக கோப்பையை வெல்லும். அதேபோல் இந்த ஆண்டு நடந்த ஆண்களுக்கான ஆசிய கோப்பைத் தொடரில் இலங்கை அணி கை பற்றியிருந்தது. அதுபோல் இலங்கை பெண்கள் அணியும் ஆசிய கோப்பையை வென்றால் முதல் முறையாக கோப்பையை வெல்லும். என்ன நடக்கும் என்பதை நாளை மதியம் 1 மணிக்கு நடக்கும் போட்டியில் பொறுத்திருந்து பார்க்கலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)