மேலும் அறிய

Shane Warne Wealth: பாசக்கார அப்பா... மொத்த சொத்துக்களையும் குழந்தைகளுக்கு எழுதி வைத்த கிரிக்கெட் வீரர்; முழு விபரம் இதோ..!

Shane Warne Wealth: மறைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னின் உயில் வெளியிடப்பட்டது. அவரது 20.7 மில்லியன் டாலர் சொத்துக்கள் அவரது குழந்தைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Shane Warne Wealth: மறைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னின் உயில் வெளியிடப்பட்டது. இவர் கடந்த மார்ச் மாதம் தாய்லாந்தில் 52 வயதில் மாரடைப்பால்  உயிரிழந்தார். அவரது 20.7 மில்லியன் டாலர் சொத்துக்கள் அவரது குழந்தைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் தனது சொத்துக்களில் தலா 31 சதவீதத்தை தனது மூன்று குழந்தைகளான ஜாக்சன், புரூக் மற்றும் சம்மர் ஆகியோருக்கு விட்டுச் சென்றதாக விக்டோரியாவில் உள்ள உச்சநீதிமன்றம் வெளியிட்ட ஆவணங்கள் கூறுகின்றன. 

எஞ்சியதை அவரது சகோதரர் ஜேசன், அவரது சொத்தில் இரண்டு சதவிகிதமும்,  மற்றும் அவரது மருமகள் டைலா மற்றும் மருமகன் செபாஸ்டியன் ஆகியோருக்கு இடையே இரண்டரை சதவிகிதமும் சொத்துகள் பிரித்து தரப்பட்டுள்ளன.  

வார்னின் வாகனங்கள் - ஒரு யமஹா மோட்டார் பைக், BMW மற்றும் Mercedes ஆகியவை ஜாக்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு மட்டும்  3லட்சத்து 75 டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பிரபல நட்சத்திரமும்  அவரது மனைவியுமான  சிமோன் கலாஹன் மற்றும் அவரது முன்னாள் மனைவி லிஸ் ஹர்லிக்கு அவரது சொத்தில் எதுவும் வழங்கப்படவில்லை. 

அவரது 20.7 மில்லியன்டாலட்  சொத்துக்களில் 6.5 மில்லியன் டாலர் மதிப்புள்ள  விக்டோரியாவில் உள்ள அவரது வீடும், அவரது ஆஸ்திரேலிய வங்கிக் கணக்கில் 5 மில்லியன் டாலரும் இருந்தது. அவரின் மற்றொரு வங்கிக் கணக்கில் 5 லட்சம் டாலரும், பங்குகளில் கிட்டத்தட்ட 3 மில்லியன் டாலரும்  வைத்திருந்தார்.

அவரது மற்ற சொத்துகளில் மிகவும் கவனம் பெற்ற சொத்து என்றால் அது 2 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஸ்கை ஜெட் ஒன்றாகும். 

ஷேன் வார்ன்க்கு,  வங்கி உள்ளிட்ட பல்வேறு நிதி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய  2 லட்சத்து 95 ஆயிரம் டாலர் மதிப்பிலான கடனும் இருந்துள்ளது.  

கடந்த மார்ச் மாதம் தாய்லாந்தில் 52 வயதில் மாரடைப்பால் வார்ன் உயிரிழந்த ஷேன் வார்னின் மரணம் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

1992ஆம் ஆண்டு முதல் 2007 க்கு இடையில் 145 போட்டிகளில் 25.41 சராசரியில் 708 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர் வரலாற்றில் மிகச்சிறந்த கிரிகெட் வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். ஷேன் வார்னை விட எந்த ஆஸ்திரேலியரும் அதிக சர்வதேச விக்கெட்டுகளை எடுத்ததில்லை.

2013 ஆம் ஆண்டு ஐசிசி கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேமில் வார்ன் சேர்க்கப்பட்டார். அதாவது, சர் டொனால்ட் பிராட்மேன், சர் கார்பீல்ட் சோபர்ஸ், சர் ஜாக் ஹோப்ஸ் மற்றும் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகியோருடன் ஷேன் வார்ன் நூற்றாண்டின் ஐந்து கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக பெயரிடப்பட்டார்.

மிகச்சிறந்த ஆஸ்திரேலியாவின் லெக்-ஸ்பின்னர் 1999 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பையை வென்ற போது அணியில் மிகவும் முக்கியமான வீரராக இருந்தார். அதேபோல் இவர் ஆஸ்திரேலியா ஆறு ஆஸிஷ் தொடர்களை வெல்லவும் முக்கிய காரணமாக இருந்துள்ளார். 

அவரது ஓய்வுக்குப் பிறகு, வார்னே சேனல் 9 மற்றும் ஃபாக்ஸ் கிரிக்கெட் ஆகியவற்றிற்கான வர்ணனையாளராகவும் ஒளிபரப்பாளராகவும் பணியாற்றினார். ஆனால் இன்று வரை ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அவர் மிகப் பெரிய ரோல் மாடலாக உள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Embed widget