
Shane Warne Demise: கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே மாரடைப்பால் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
மாரடைப்பு காரணமாக அவர் தாய்லாந்தில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் தாய்லாந்தில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 52.
Former Australian Cricketer Shane Warne dies of ‘suspected heart attack’, aged 52, says Fox Sports pic.twitter.com/cgocTvhLCC
— ANI (@ANI) March 4, 2022
கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக கருதப்படுபவர் ஷேன் வார்னே. சிட்னியில் இந்திய அணிக்கு எதிராக 1992ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 708 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக 15 ஆண்டுகள் விளையாடியவர். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் (708) வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமைக்குரியவர் வார்னே.
ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ராட் மார்ஷும் இன்றுதான் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஷேன் வார்னே ட்விட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷேர் வார்னேவின் கடைசி ட்வீட்:
‘ராட் மார்ஷ் காலமானார் என்ற செய்தி கேட்டு வருத்தமாக உள்ளது. அவர் எங்கள் நாட்டின் சிறந்த விளையாட்டு வீரர். இளம் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஒரு உத்வேகமாக இருந்தார். ராட் கிரிக்கெட்டில் ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்தவர். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் மீதும் அக்கறையாக இருந்தார். ரோஸ் மற்றும் அவரது குடும்பத்திற்கு நிறைய அன்புகள் கிடக்கட்டும். RIP தோழர்’ எனப் பதிவிட்டுள்ளார்.
Sad to hear the news that Rod Marsh has passed. He was a legend of our great game & an inspiration to so many young boys & girls. Rod cared deeply about cricket & gave so much-especially to Australia & England players. Sending lots & lots of love to Ros & the family. RIP mate❤️
— Shane Warne (@ShaneWarne) March 4, 2022
ஷேன் வார்னே தாய்லாந்தில் உள்ள அவரது பங்களாவில் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகவும், டாக்டர்கள் வந்து அவரை பரிசோதித்த போதே இறந்துவிட்டதாகவும், இந்த நேரத்தில் தங்களை தனிமையில் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என்றும் அவரது குடும்பத்தினர் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

