Shakib Al Hasan Record : ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்களை எடுத்த முதல் பங்களாதேஷ் வீரர் - சகிப் அல் ஹசன் புதிய சாதனை!
Shakib Al Hasan Record: ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 300 விக்கெட்களை எடுத்த முதல் பங்களாதேஷ் வீரர் என்ற சாதனையை சகிப் அல் ஹசன் பதிவு செய்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 300 விக்கெட்களை எடுத்த முதல் பங்களாதேஷ் வீரர் என்ற சாதனையை சகிப் அல் ஹசன் பதிவு செய்துள்ளார்.
இங்கிலாந்து - பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட் வீழ்த்தினார். இலங்கையின் சஞ்சய் ஜெயசூர்யா, நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி ஆகியோருக்கு அடுத்து 300 விக்கெட்கள் எடுத்த வீரர் என்று சாதனை படைத்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 300 விக்கெட்களை 14-வது வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரீஹன் அகமத் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 300-வது விக்கெட்டை எடுத்தார்.ஒருநாள் போட்டிகளில் 6000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்கள் எடுத்த மூன்றாவது என்ற சாதனையையும் பதிவு செய்துள்ளார்.2006 ஆம் ஆண்டு ஜிம்பாவே வீரர் எல்டான் சிகும்புராவின் விக்கெட் எடுத்ததன் மூலம் தனது முதல் விக்கெட்டை பதிவு செய்தார். 2010 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டியில் தனது 100-வது விக்கெட்டை எடுத்தார். ஷாகிப் டெஸ்ட் போட்டிகளில் 231 விக்கெட்கள் மற்றும் டி-20 போட்டிகளில் 128 விக்கெட்களை எடுத்துள்ளார். பங்களாதேஷ் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் 227 போட்டிகளில் 6976 ரன் எடுத்து 37.70 சராசரி வைத்திருக்கிறார். 9 சதம் மற்றூம் 52 அரைசதம் வைத்திருக்கிறார். ஆஸ்திரேலியாவின் ஸ்டார் பவுலர் மிட்சல் ஸ்டார்க் 211 விக்கெட்கள் எடுத்து சகிப் அல் ஹசனுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார்.
அதிவேக சாதனை
கிரிக்கெட் வீரர் குறைந்த காலத்தில் அதிக விக்கெட்களை எடுத்தவர் என்ற சாதனைக்கும் சகிப் அல் ஹசன் சொந்தக்காரர். ஆறு ஆண்டுகளில் 300 விக்கெட்களை எடுத்துள்ளார். இலங்கையின் லசித் மலிங்கா மற்றும் ஆஸ்திரேலியாவின் பிர்ட் லீ ஆகியோரும் இதில் அடங்குவர். பிரட் லீ 171 போட்டிகளில் 300 விக்கெட்களை எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்கள் எடுத்த பந்துவீச்சாளர்கள் விவரம்
பந்துவீச்சாளர் | போட்டிகள் | விக்கெட்கள் | BBI | Economy | 4w | 5w |
முத்தையா முரளிதரன் (இலங்கை) | 350 | 534 | 7/30 | 3.93 | 15 | 10 |
வாசிம் அக்ரம் (பாகிஸ்தான்) | 356 | 502 | 5/15 | 3.89 | 17 | 6 |
வாகர் யூனிஸ் (பாகிஸ்தான்) | 262 | 416 | 7/36 | 4.68 | 14 | 13 |
சமிந்தாஸ் வாஸ் (இலங்கை) | 322 | 400 | 8/19 | 4.18 | 9 | 4 |
ஷாஹித் அஃப்ரிடி (பாகிஸ்தான்) | 398 | 395 | 7/12 | 4.62 | 4 | 9 |
ஷான் பொல்லக் (தென்னாப்பிரிக்கா) | 303 | 393 | 6/35 | 3.67 | 12 | 5 |
க்ளென் மெக்க்ராத் (ஆஸ்திரேலியா) | 50 | 381 | 7/15 | 3.88 | 9 | 7 |
பிரெட் லீ (ஆஸ்திரேலியா) | 221 | 380 | 5/22 | 4.76 | 14 | 9 |
லத்தீஸ் மலிங்கா (இலங்கை) | 226 | 338 | 6/38 | 5.35 | 11 | 8 |
அணில் கும்ளே (இந்தியா) | 271 | 337 | 6/12 | 4.30 | 8 | 2 |
சனத் ஜெயசூர்யா (இலங்கை) | 445 | 323 | 6/29 | 4.78 | 8 | 4 |
ஜவகல் ஸ்ரீநாத் (இந்தியா) | 229 | 315 | 5/23 | 4.44 | 7 | 3 |
டேனியல் வெட்டோரி (நியூஸிலாந்து) | 295 | 305 | 5/7 | 4.12 | 8 | 2 |
சகிப் அல் ஹசன் (வங்கதேசம்) | 227 | 300* | 5/29 | 4.45 | 10 | 4 |
சகிப் அல் ஹசன் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
மேலும் வாசிக்க..Women’s Day Spl: மகளிர் தினத்தில் மிகப்பெரிய கவுரவம்.. அனைவரும் இலவசமாய் பாருங்கள்.. பிசிசிஐ கொடுத்த ஆஃபர்!
மேலும் வாசிக்க. ஆஸி. தொடருக்குப் பின் இவர்கள் இந்திய டெஸ்ட் அணியில் இல்லை..! இந்த 3 பேர் ஓய்வு பெற வாய்ப்பா..?