மேலும் அறிய

Sachin Wish Ashwin: டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த அஸ்வின்..தமிழில் வாழ்த்து கூறிய சச்சின்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 450 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வினுக்கு, முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சின் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அஸ்வினை வாழ்த்திய சச்சின்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 450 விக்கெட்டுகளை வீழ்த்திய தமிழகத்தை  சேர்ந்த அஸ்வினுக்கு, முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சின் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், ”அற்புதமான மைல்கல், வாழ்த்துகள் அஸ்வின்” என குறிப்பிட்டுள்ளார். சச்சின் தமிழில் வாழ்த்து கூறியதை, ரசிகர்கள் பலரும் ரீடிவீட் செய்து வருகின்றனர்.  இதேபோன்று பல்வேறு இந்நாள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், பல்வேறு நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்களும், அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முதல் இந்தியராக அஸ்வின் சாதனை:

மகாராஷ்ட்ராவின் நாக்பூரில் உள்ள மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் தங்களது முதல் டெஸ்ட் போட்டியில் ஆடி வருகின்றனர். டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி தங்களது முதல் இன்னிங்சில் 177 ரன்களில் சுருண்டது. ஜடேஜா மற்றும் அஸ்வின் சுழலில் மிரட்டினர். ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் அவர் பல்வேறு சாதனைகளை படைத்தார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களுடன் 450 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற புதிய சாதனையை அஸ்வின் படைத்தார். சர்வதேச அளவில் ஷேன் வார்னே மற்றும் ஸ்டூவர்ட் பிராட்டிற்கு அடுத்தபடியாக இந்த சாதனையை படைத்த மூன்றாவது வீரர் அஸ்வின்.

கும்ப்ளேவை பின்னுக்கு தள்ளிய அஸ்வின்:

இந்திய அளவில் 450 விக்கெட்டுகளை அதிவேகமாக கைப்பற்றிய முதல் இந்தியர் என்ற சாதனையையும் அஸ்வின் படைத்தார். இதற்கு முன்பு இந்திய அணிக்காக இந்த சாதனையை தன் வசம் அனில் கும்ப்ளே வைத்து இருந்தார். அவர் 93 டெஸ்ட் போட்டிகளில் 450 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். மேலும், சர்வதேச அளவில் அதிவேகமாக 450 விக்கெட்டுகளை அதிவேகமாக வீழ்த்திய 2வது பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். 89 டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் படைத்த சாதனையை முரளிதரன் 80 டெஸ்ட் போட்டிகளிலே படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனில் கும்ப்ளே 2005ம் ஆண்டு ஈடன்கார்டன் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்த சாதனையை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மட்டும் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 92 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அனில் கும்ப்ளே டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 111 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட்டில் அஸ்வின்:

அஸ்வின் இதுவரை 89 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 452 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 140 ரன்களை விட்டுக்கொடுத்து 13 விக்கெட்டுகளை வீழ்த்தியது ஆகும். ஒரு இன்னிங்சில் மட்டும் 59 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அஸ்வின் ஒருநாள் போட்டிகளில் 151 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 72 விக்கெட்டுகளையும், ஐ.பி.எல். தொடரில் 157 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget