WatchVideo: மச்சான் திருமணத்தில் அனல் பறக்கும் பாங்கரா நடனம்... அசத்தும் ரோஹித் சர்மா...வைரல் வீடியோ!
நேற்றைய இரவு சங்கீத் நிகழ்வில் டான்ஸ் ஃப்ளோர் அதிர ரோஹித் சர்மா நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
தன் மனைவியின் சகோதரர் திருமணத்தில் கலந்துகொண்டு ரோஹித் சர்மா நடனமாடிய வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி முன்னதாக 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடர் இன்று (மார்ச்.17) தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ரோஹித் சர்மா தன் மனைவியின் சகோதரரது திருமணத்தில் கலந்துகொள்வதால் இன்றைய போட்டியில் கலந்துகொள்ளப்போவதில்லை என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்றைய இரவு சங்கீத் நிகழ்வில் டான்ஸ் ஃப்ளோர் அதிர ரோஹித் சர்மா நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
தன் மனைவி ரித்திகா சஜ்தேவின் சசோதரர் குனால் சஜ்தேவின் திருமணத்தில் பஞ்சாபி பாடல் ஒன்றுக்கு கலக்கலாக ரோஹித் சர்மா நடனமாடும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Rohit Sharma and co dancing during his Brother-in-law marriage function. pic.twitter.com/p6IsnFYUf1
— Johns. (@CricCrazyJohns) March 17, 2023
திருமணத்தில் கலந்துகொண்ட உறவினர்கள் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ள நிலையில், டெஸ்ட் தொடரை வென்ற களிப்பில் ரோஹித் சர்மா நடனமாடும் வீடியோவை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.
இன்றைய முதல் ஒருநாள் போட்டி முன்னதாக மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நிலையில், ஹர்திக் பாண்டியாவின் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், இந்திய அணி பந்துவீச்சாளர்கள் தந்த நெருக்கடியில் 35.4 ஓவர்களில் 188 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி சுருண்டது.
அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், அணியை மெல்ல மெல்ல மீட்ட கே.எல். ராகுல் - ஜடேஜா கூட்டணி மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டு இந்திய அணியை வெற்றிப் பாதையில் இட்டுச் சென்றனர்.
இந்திய அணி ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் சேர்த்தது. ராகுல் 75 ரன்களுடனும் ஜடேஜா 45 ரன்களுடனும் இறுதி வரை களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்ஷெல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1 -0 என முன்னிலை வகிக்கிறது.