Ric Flair strut: கோப்பையை வாங்கும்போது ரோகித் போட்ட கியூட் டான்ஸ் - அது என்ன ரிக் ஃப்ளேயர் ஸ்ட்ரட்..!
Ric Flair strut: டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற பிறகு, கோப்பையை பெறும்போது ரோகித் சர்மா செய்த செயல் இணையத்தில் வைரலாகியுள்ளது.
Ric Flair strut: ரிக் ஃப்ளேயர் என்பவரின் ஸ்டைலை பிம்பற்றி, டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா பெற்றார்.
கோப்பையை தட்டி தூக்கிய இந்தியா:
சனிக்கிழமையன்று பார்படாஸில் நடந்த டி20 உலகக் கோப்பை 2024 இறுதிப்போட்டியில் வென்று, இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதன் மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையையும், 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி கோப்பையையும் வென்று இந்திய அணி அசத்தியுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பார்படாஸில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பைய வென்றதோடு, கடைசி 4 ஓவர்களில் இந்திய அணி அட்டகாசமான கம்பேக் கொடுத்து அசத்தியுள்ளது. இந்நிலையில் கோப்பையை பெறும்போது, ரோகித் செய்த செயல் இணையதில் வைரலாகியுள்ளது.
The Ric Flair Strut by Rohit Sharma 😍 pic.twitter.com/j23pxZcpdD
— rae (@ChillamChilli) June 30, 2024
ரோகித் சர்மாவின் கியூட் செயல்:
போட்டி முடிந்ததை தொடர்து பட்டம் வென்ற இந்திய அணிக்கு, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கோப்பையை வழங்கினார். அப்போது சற்றே குனிந்து தத்தி தத்தி உற்சாகமாக வந்த கேப்டன் ரோகித் சர்மா கோப்பையை வாங்கினார். இந்த கியூட்டான வீடியோ இணையத்தில் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது.
Rohit Sharma did the iconic Ric Flair strut on his way to collecting the T20 World Cup 2024 trophy from Jay Shah at the presentation ceremony in Barbados on June 29,2024 on Saturday. pic.twitter.com/GtkVlqwUXK
— Pushparaj Shetty (@Pushparajshet19) June 30, 2024
அதென்ன ரிக் ஃப்ளேயர் ஸ்ட்ரட்?
ரோகித் சர்மா பின்பற்றிய ஸ்டைலின் பெயரின், ரிக் ஃப்ளேயர் ஸ்ட்ரட் என குறிப்பிடப்படுகிறது. WWE எனப்படும் வணிக ரீதியான வணிகச் சண்டை மூலம் பிரபலமானவர் ரிக் ஃப்ளேயர். இவர் போட்டி நேரத்தில் களத்திற்குள் வரும்போது, இதேபோன்று சற்றே குனிந்து தத்தி தத்தி தவழ்ந்து மெதுவாக உள்ளே வருவார். இது மிகவும் பிரபலமான ஸ்டைல் ஆகும். அதேபாணியில் ரோகித் சர்மா டி20 உலகக் கோப்பையை பெற்றுள்ளார். முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு கால்பந்தாட்ட உலகக் கோப்பையை வென்றபோதும், அர்ஜெண்டினா அணி கேப்டன் மெஸ்ஸியும் இதேபாணியில் தான் கோப்பையை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டி ஐபிஎல் தொடரில் கோப்பையை கைப்பற்றிய கொல்கத்தா அணி கேப்டன், ஸ்ரேயாஸ் அய்யரும் இதே பாணியில் தான் கோப்பையை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தகக்து.