Rohit Sharma Breaks Down: "அரையிறுதி தோல்வி மிகுந்த ஏமாற்றமே.." : கண்ணீர் சிந்திய இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா...!
அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது மிகவும் ஏமாற்றம் என்று ரோகித்சர்மா வேதனை தெரிவித்துள்ளார்.
உலககோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து நடப்பு உலககோப்பை டி20 தொடரை விட்டு வெளியேறியுள்ளது. இந்த நிலையில், அடிலெய்டில் இன்று அடைந்த தோல்விக்கு பிறகு, இந்திய கேப்டன் ரோகித்சர்மா கூறியிருப்பதாவது, “ இந்த நாள் இப்படி மாறியது உண்மையிலே மிகவும் ஏமாற்றம். பிற்பகுதியில் நாங்கள் மிகவும் சிறப்பாகவே பேட் செய்தோம். நாங்கள் பந்துவீச்சில் நினைத்ததை செய்ய முடியவில்லை.
அழுத்தமான சூழலில் விளையாடுவது பற்றியது இது. இவர்கள் அனைவரும் அழுத்தமான சூழலில் ஐ.பி.எல். போட்டிகளில் ஆடியுள்ளனர். நாங்கள் ஆட்டத்த தொடங்கியபோது பதற்றமாக இருந்தோம். ஆனால், எதிரணியின் தொடக்க வீரர்களை பாராட்டியே ஆக வேண்டும். அவர்கள் சிறப்பாக ஆடினார்கள். முதல் ஓவரில் ஸ்விங் ஆகும் என்று நினைத்தேன். ஆனால், சரியான இடத்தில் இருந்து ஆகவில்லை.
நாங்கள் முதல் ஆட்டத்தை வென்றபோது எங்களுக்கு பல குணங்களை அது காட்டியது. வங்காளதேசத்திற்கு எதிராக ட்ரிக்கான ஒன்றாக இருந்தது. 9 ஓவர்களுக்குள் 85 ரன்களை கட்டுப்படுத்துவது கடினமானதாக இருந்தாலும், நாங்கள் பதற்றத்தை கையாண்டதுடன் எங்கள் திட்டத்தை செயல்படுத்தினோம். ஆனால், இன்று அதை செய்ய முடியவில்லை. உங்கள் திட்டத்தை எப்போது செயல்படுத்த முடியவில்லையோ அப்போது நீங்கள் சிக்கலுக்கு ஆளாவீர்கள்”
இவ்வாறு அவர் பேசினார்.
அடிலெய்ட் மைதானத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 27 ரன்களுக்கும், கே.எல்.ராகுல் 5 ரன்களுக்கும், சூர்யகுமார் யாதவும் 14 ரன்களில் ஏமாற்றினார். விராட்கோலி 50 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ஆடி 63 ரன்களும் எடுக்க இந்தியா எதிர்பார்த்ததை விட நன்றாகவே இலக்கு நிர்ணயித்தது.
169 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் பட்லரும், ஹேல்சும் சிக்ஸர், பவுண்டரிகள் என விளாசி 16 ஓவர்களில் 170 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இந்த தொடர் முழுவதும் அபாரமாக ஆடிய இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து வெளியேறியது இந்திய ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க : IND vs ENG, Match Highlights: பட்லர், ஹேல்ஸ் மிரட்டல் பேட்டிங்..! சொதப்பல் பவுலிங்..! 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா பரிதாப தோல்வி..
மேலும் படிக்க : Virat Kohli 4000 Runs T20: வீரா வீரா.. வாடா வாடா.. புதிய வரலாறு படைத்த விராட்கோலி..! 4 ஆயிரம் ரன்களை கடந்த மாஸ் மொமெண்ட்..