Watch Video: டெக்ஸாஸ் சென்ற ஹிட்மேன் ரோஹித் ஷர்மா.. ரசிகர்கள் உற்சாக வரவேற்பு! வைரல் வீடியோ
வெளி நாடுகளில் சுற்றி வரும் ரோஹித் ஷர்மா டெக்ஸாஸ் நாட்டிற்கு சென்றிருக்கிறார். அங்குள்ள ப்ரிஸ்கே நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஜாலியாக சுற்றும் வீரர்கள்:
கடந்த ஜூன் 29 ஆம் தேதி இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனைத்தொடர்ந்து நாடு திரும்பிய வீரர்களுக்கு ரசிகர்கள் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு வரலாற்றில் இடம் பெறும் வண்ணம் இருந்தது. அப்படி ரசிகர்களின் உற்சாக வரவேற்பை தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் தங்களது நேரத்தை குடும்பத்தினருடன் செலவிட்டு வருகின்றனர்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை நேரில் பார்ப்பதற்கு வெளி நாடு புறப்பட்டார். தற்போது அவர் தனது குடும்பத்தினருடன் ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார். முன்னதாக நேற்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தன்னுடைய மகன் அகாய் கோலியுடன் லண்டன் நகரில் சுற்றி வரும் வீடியோ வெளியாகி வைரலானது.
டெக்ஸாஸில் ஹிட்ஂமேன் ரோஹித் ஷர்மா:
இந்நிலைதான் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அதாவது ஜாலியாக வெளி நாடுகளில் சுற்றி வரும் ரோஹித் ஷர்மா டெக்ஸாஸ் நாட்டிற்கு சென்றிருக்கிறார்.
latest Captain Rohit Sharma at the grandion event in Frisco TX.🤍✨🔥
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) July 19, 2024
The creze and madness for Captain @ImRo45 🥵🔥🐐 pic.twitter.com/Ryva9IV7b1
அங்குள்ள ப்ரிஸ்கே நகருக்கு அவர் சென்றிருக்கிறார். நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதகா இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான வீரர்கள் பட்டியல் நேற்று பிசிசி அறிவித்தது. அதன்படி இந்திய ஒரு நாள் அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா மற்றும் டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவ் அறிவிக்கப்பட்டனர்.
ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி:
ரோஹித் ஷர்மா (C), சுப்மான் கில் (VC), விராட் கோலி, கேஎல் ராகுல் (WK), ரிஷப் பந்த் (WK), ஷ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா
டி20 போட்டிக்கான இந்திய அணி:
சூர்யகுமார் யாதவ் (C), சுப்மன் கில் (VC), யஷஹ்வி ஜெய்ஷ்வால், ரிங்கு சிங், ரியான் பிராக், ரிஷப் பண்ட் (WK), சஞ்சு சாம்ச்ன (WK), ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது.