மேலும் அறிய

இவரு இப்படியா? இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய ஆர்சிபி வீரர்.. பல பெண்களுடனும் தொடர்பு

ஆர்சிபி வீரர் யஷ் தயாள் திருமணம் செய்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து ஏமாற்றியதாக இளம்பெண் புகார் அளித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியன் ஆர்சிபி. அந்த அணியின் நட்சத்திர வீரர் யஷ் தயாள். அந்த அணியின் ஆஸ்தான வேகப்பந்துவீச்சாளராக யஷ் தயாள் உள்ளார். ஆர்சிபி அணியின் வெற்றிக்கு இவர் முக்கிய பங்காற்றி வருகிறார். இந்த நிலையில், ஆர்சிபி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக இவர் மீது இளம்பெண்ணை ஏமாற்றிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

யஷ் தயாள் மீது புகார்:

யஷ் தயாள் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர். உத்தபிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அம்மாநில முதலமைச்சருக்கு இணையதளம் மூலமாக புகார் அளித்துள்ளார். அந்த  புகாரில், யஷ் தயாள் தன்னை 5 ஆண்டுகள் காதலித்தார் என்றும்,  அவரது குடும்பத்தினரிடம் தன்னை அவர்களது மருமகள் என்று அறிமுகப்படுத்தியதாகவும், தன்னிடம் ஒரு கணவன் போலவே நடந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த 5 ஆண்டுகள் பழக்கத்தின்போது தன்னிடம் இருந்து ஏராளமான பணம் வாங்கியதாகவும், அவர் திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி அளித்து கூறி மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் கொடுமைப்படுத்தினார் என்றும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

ஆதாரங்கள் சமர்ப்பணம்:

மேலும், இந்த புகாருக்கு ஆதாரம் சேர்க்கும் வகையில் யஷ் தயாளுடனான குறுஞ்செய்திகள், அந்த குறுஞ்செய்திகளின் ஸ்கிரீன்ஷாட், வீடியோ கால் ரெக்கார்ட்ஸ், புகைப்படங்கள் ஆகியவற்றையும் அவர் சமர்ப்பித்துள்ளார். இதுமட்டுமின்றி, யஷ் தயாள் பல பெண்களுடன் இதுபோன்று தொடர்பில் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். 

ரசிகர்கள் அதிர்ச்சி:

இந்த புகார் தொடர்பாக கடந்த 14ம் தேதியே அவர் மகளிர் உதவிமையத்திற்கு புகார் அளித்திருந்தார். யஷ் தயாள் மீதான இந்த புகார் ஆர்சிபி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 27 வயதான யஷ் தயாள் 1997ம் ஆண்டு அலகாபாத்தில் பிறந்தவர். இதுவரை இந்திய அணிக்காக ஒரு போட்டியில் கூட ஆடாத யஷ் தயாள், ஐபிஎல் போட்டிகளில் 43 போட்டிகளில் ஆடி 41 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

யஷ் தயாள் மீது எழுந்துள்ள புகார் குறித்து விசாரிக்க காவல்துறைக்கு அந்த மாநில முதலமைச்சர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. ஆர்சிபி அணியின் டெத் பவுலராக பல போட்டிகளில் வெற்றியைப் பெற்றுத் தந்த யஷ் தயாள் காதல் விவகாரத்தில் இளம்பெண்ணை ஏமாற்றியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டால் அவரை இணையதளத்தில் பலரும் விமர்சித்து வருகின்றனர். திருமணம் செய்வதாக மட்டுமின்றி, பல பெண்களுடனும் அவர் தொடர்பில் இருப்பதாக கூறியிருக்கும் குற்றச்சாட்டு ரசிகர்களை பேரதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தலைப்பு செய்திகள்

18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Yamaha Scooter Launch: ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
Embed widget