Ravindra Jadeja: ரவீந்திர ஜடேஜா ஏன் டெஸ்டில் நம்பர் ஒன் ஆல்ரவுண்டர்? ரெக்கார்டை பார்த்து தெரிஞ்சுகோங்க!
கடைசி 11 இன்னிங்ஸ்களில் ஜடேஜாவின் பேட்டிங் திறமையை பார்த்தால், அவர் ஏன் நம்பர் 1 இடத்தில் ஆணி அடித்தது போல் அமர்ந்துள்ளார் என்பது தெளிவாக தெரியவரும்.
இந்திய அணி தற்போது தனது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிலும், குறிப்பாக முதல் போட்டியிலேயே ஜடேஜா அரைசதம் அடித்து பேட்டிங்கிலும், விக்கெட்களை எடுத்து பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டார். தற்போது டெஸ்டி ஆல்ரவுண்டராக ஜடேஜா முதலிடத்தில் உள்ளார்.
கடைசி 11 இன்னிங்ஸ்களில் ஜடேஜாவின் பேட்டிங் திறமையை பார்த்தால், அவர் ஏன் நம்பர் 1 இடத்தில் ஆணி அடித்தது போல் அமர்ந்துள்ளார் என்பது தெளிவாக தெரியவரும்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஜடேஜா முதல் இன்னிங்சில் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து பேட்டிங் செய்த அவர் 180 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 87 ரன்கள் எடுத்தது இன்னிங்ஸின் அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. சிறப்பாக ஆடிய ஜடேஜா சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜோ ரூட் பந்தில் எல்பியூடபிள்யூ முறையில் வெளியேறினார். இதையடுத்து, ஜடேஜா 87 ரன்கள் எடுத்து தனது சிறப்பான இன்னிங்ஸால் இந்தியா நல்ல ஸ்கோரை எட்ட உதவினார்.
கடைசி 11 இன்னிங்ஸில் ஜடேஜாவின் பேட்டிங்:
கடைசி 11 இன்னிங்ஸ்களில் சொந்த மண்ணில் ஜடேஜா 51.88 என்ற சிறந்த சராசரியுடன் 467 ரன்கள் எடுத்துள்ளார். இந்த காலகட்டத்தில் ஜடேஜா 1 சதம் மற்றும் 3 அரை சதங்கள் அடித்துள்ளார். சொந்த மண்ணில் டெஸ்ட் விளையாடும் போது, ஜடேஜா கடந்த மூன்று வருட இன்னிங்ஸில் முறையே 50, 00, 175*,04, 22, 70, 26, 04, 07, 28, 87 ரன்கள் எடுத்துள்ளார்.
Innings - 11
— Wisden India (@WisdenIndia) January 26, 2024
Runs - 467
Average - 51.88
Fifties - 3
Century - 1
Ravindra Jadeja - No.1 Test all-rounder in the world for a reason 🔥#RavindraJadeja #India #INDvsENG #Tests #Cricket pic.twitter.com/9jfDbVvG6W
ஜடேஜா டெஸ்டில் இதுவரை:
கடந்த 2012ம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் ஜடேஜா. இதுவரை 99 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்துள்ள அவர், 35.94 சராசரியில் 3 சதங்கள் மற்றும் 19 அரைசதங்களுடன் 2804 ரன்கள் எடுத்துள்ளார். இதில், இவரது அதிகபட்ச ஸ்கோர் 175 நாட் அவுட் ஆகும். மேலும், டெஸ்ட் போட்டியில் இதுவரை ஜடேஜா 283 பவுண்டரிகளும், 58 சிக்ஸர்களும் அடித்துள்ளார்.
இதுதவிர, 128 இன்னிங்ஸ்களில் பந்துவீசிய ஜடேஜா 24.07 சராசரியில் 275 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதில், ஜடேஜா 12 முறை ஐந்து விக்கெட்டுகளையும், 12 முறை நான்கு விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
இங்கிலாந்து அணி 2வது இன்னிங்ஸில் எப்படி..?
இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி தற்போது 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது. ஒல்லி போப் 81 ரன்கள் எடுத்து விளையாடிக்கொண்டிருந்தார். பென் ஃபாக்ஸ் 10 ரன்கள் எடுத்த நிலையில் விளையாடிக் கொண்டிருந்தார். இங்கிலாந்து அணியில் கடைசியாக ஜாக் கிராலி 31 ரன்களிலும், பென் டக்கெட் 47 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட்டால் 2 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய அணி சார்பில் இரண்டாவது இன்னிங்சில் ஜஸ்பிரித் பும்ரா ஜானி பேரிஸ்டோவை 10 ரன்கள் எடுத்திருந்தபோது, மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர். ரவீந்திர ஜடேஜா அவரை க்ளீன் போல்ட் செய்தார்.